Breaking News

பாதுகாப்புச் செயலருக்கு சிங்கப்பூரில் இருதய சத்திரசிகிச்சை



சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சிக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே கருணாசேன ஹெற்றியாராச்சிக்கு இருதய சத்திரசிகிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.

கருணாசேன ஹெற்றியாராச்சி மருத்துவ விடுப்பைப் பெற்றிருப்பதால், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலராக முன்னாள் புத்தளம் மாவட்டச் செயலர் கிங்ஸ்லி பெர்னான்டோ, நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.