கேப்பாபுலவு மக்களுக்காக பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்
கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு மக்களின் வாழ்விடங்களை கோரிய போராட்டங்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது.
கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பு போன்ற கிராம மக்கள் தமது அவல வாழ்க்கையிலிருந்து மீண்டெழப் போராடுவது நியாயமானதே. இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்கக்கோரி கோப்பபுலவு மக்கள் வெயில் மழை பாராது வீதியோரம் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள் இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் வழங்கும்கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.