Breaking News

தொடரும் தவறுகள்! செல்­வ­ரட்னம் சிறி­தரன்


போராட்டம் நடத்­து வ­தற்­கான ஜன­நா­யக வெளியை
ஏற்­ப­டுத்­தி­யி ருந்தால் மட்டும் போதாது, எதற்­காகப் போராட்­டங்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன என் பதைக் கண்­ட­றிந்து அந்தப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்­டி­யது ஆட்­சி­யா­ளர்­களின் பொறுப்­பாகும்

வடக்கில் காணி உரி­மைக­ளுக்­கான போராட்­டங்­களும், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் அர­சாங்­கத்தை பொறுப்பு கூறச் செய்­வ­தற்­கா­கவும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள போராட்­டங்­களும் மேலும் மேலும் விரி­வ­டைந்து செல்லத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. ஆயினும் அர­சாங்கம் எந்­த­வொரு பிரச்­சி­னைக்கும் தீர்வு காண்­ப­திலோ அல்­லது பிரச்­சி­னைக்கு முடிவு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­திலோ ஆர்வம் காட்டிச் செயற்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை.

இதனால், அர­சாங்­கத்தின் மீதான அதி­ருப்­தியும் நம்­பிக்­கை­யற்ற தன்­மையும் தமிழ் மக்கள் மத்­தியில் நாளுக்கு நாள் மோச­ம­டைந்து சென்று கொண்­டி­ருக்­கின்ற ஒரு போக்­கையும் அவ­தா­னிக்க முடி­கின்­றது. காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் பற்­றிய பிரச்­சி­னைக்கு அர­சாங்கம் முடிவு சொல்ல வேண்டும் எனக் கோரி நீண்ட நாட்­க­ளா­கவே காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் போராட்டம் நடத்தி வரு­கின்­றனர். இதே­போன்று பொது­மக்­களின் காணி­களை விடு­விக்க வேண்டும் என்ற போராட்­டமும் நீண்ட நாட்­க­ளா­கவே நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

முன்­னைய அர­சாங்­கத்­திலும் இத்­த­கைய போராட்­டங்கள் இடம்­பெற்­றி­ருந்த போதிலும், அந்தப் போராட்­டங்கள் அர­சியல் கட்­சி­க­ளி­னாலும், அர­சியல் தலை­வர்­க­ளி­னா­லுமே முக்­கி­ய­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. அதே­நேரம் காணாமல் ஆக்­கப்­பட்­டோரைக் கண்டு பிடிப்­ப­தற்­கான சங்கம் உள்­ளிட்ட பல அமைப்­புக்கள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காகக் குரல் கொடுத்­தி­ருந்­தன.

முன்­னைய அர­சாங்­கத்தில் இந்தப் போராட்­டங்கள் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் பெரும் அச்­சத்­திற்கும் மத்­தி­யி­லேயே நடத்­தப்­பட்­டி­ருந்­தன. ஆனால் ஆட்சி மாற்­றத்தின் பின்னர், அத்­த­கைய அச்­சு­றுத்­தலும், அச்­சப்­ப­டு­கின்ற நிலை­மயும் மாற்­ற­ம­டைந்­தி­ருக்­கின்­றன. எதேச்­ச­தி­கார அர­சாங்கம் தோற்­க­டிக்­கப்­பட்டு நல்­லாட்­சிக்­கான அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­ட­போது, மக்கள் எதிர்­நோக்­கி­யுள்ள எரி­கின்ற பல பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும் என்ற எதிர்­பார்ப்பு அதி­க­மா­கவே இருந்­தது

அதற்­கேற்ற வகையில் தாங்கள் ஆட்­சி­ய­மைத்தால், அரச படை­க­ளினால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள காணி­களை அவற்றின் உரி­மை­யா­ளர்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தற்­போ­தைய பிர­த­ம­ரு­மா­கிய ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

வலி­காமம் வடக்கில் இரா­ணு­வத்­தி­னரால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள பொது­மக்­க­ளு­டைய காணி­களை உரி­ய­வர்­க­ளிடம் கைய­ளிக்க வேண்டும் எனக் கோரி, யாழ்ப்­பாணம் வலி­காமம் பிர­தே­சத்தில் நடத்­தப்­பட்­ட­தொரு ஆர்ப்­பாட்ட நிகழ்வில் பங்கு பற்­றிய­வர்­க­ளிடம் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த உறு­தி­மொ­ழியை வழங்­கி­யி­ருந்தார்.

அதே­போன்று, ஆட்சி மற்­றத்­திற்­காக வாக்­க­ளிக்­கு­மாறு வேண்­டிக்­கொண்ட கட்­சிகள், காணிப்பிரச்­சினை மற்றும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் பற்­றிய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும் என்று பொது­வான எதி­ர்­பார்ப்பு ஒன்றை இன்று ஆட்சி பீடத்தில் இருக்­கின்ற அர­சியல் தலை­வர்கள் தமிழ் மக்கள் மனதில் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள். ஆனால், இன்று அந்த எதிர்­பார்ப்பு நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அது மட்­டு­மல்­லாமல், அந்த எதிர்­பார்ப்பு ஏமாற்­ற­மா­கவும் மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது.

காணிப்பிரச்­சி­னை­யா­னா­லும்­சரி, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் பற்­றிய பிரச்­சி­னை­யா­னா­லும்­சரி அந்தப் பிரச்­சி­னையின் முக்­கி­யத்­து­வத்தைப் பலரும் நன்கு அறிந்து வைத்­தி­ருக்­கின்­றார்கள். அந்தப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­பட வேண்டும் என தெரிந்து வைத்­தி­ருக்­கின்­றார்கள் என்­பதில் எந்­த­வித சந்­தே­கமும் இல்லை. ஆனாலும் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு முன்­வர வேண்­டி­ய­வர்கள் வாய் மூடி மௌனி­க­ளா­கி­யி­ருக்­கின்­றார்கள். தீர்­வுக்­கான முன் முயற்­சி­களை மேற்­கொள்ள வேண்­டி­ய­வர்­களும் போராட்­டங்­களைக் கண்டு கொள்­ளா­த­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றார்கள்.

நல்­லாட்­சியில் ஏற்­பட்­டுள்ள ஜன­நா­யக வெளி

முன்­னைய அர­சாங்­கத்தில் ஜன­நா­யகம் அடித்து நொறுக்­கப்­பட்­டி­ருந்­தது. எதேச்­ச­தி­காரம் தலை­தூக்­கி­யி­ருந்­தது. ஜன­நா­ய­கத்­தையும் மக்­க­ளு­டைய உரி­மை­க­ளையும் நிலை­நாட்­டு­வ­தற்­கா­கவே ஆட்­சியில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி, புதிய அர­சாங்­கத்தை நாட்டு மக்கள் உரு­வாக்­கி­யி­ருந்­தார்கள்.

ஆனால், புதிய அர­சாங்­கமும் முன்­னைய அர­சாங்­கத்தைப் போலவே செயற்­பட்டால், அதனை பாதிக்­கப்­பட்ட மக்கள் ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள். ஆட்சி மாற்­றத்தை உரு­வாக்­கு­வ­தற்­காக உழைத்­த­வர்­களும் தங்­களால் ஆட்­சி­பீடம் ஏற்­றப்­பட்ட புதிய அர­சாங்கம் எதிர்­பார்த்­த­வாறு செயற்­ப­டா­ததை ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள்.

இதனை வெளிப்­ப­டுத்தும் வகை­யி­லேயே, கேப்­பாப்­பு­லவில் பில­வுக்­கு­டி­யி­ருப்பில் உள்ள தமது காணி­களில் இருந்து விமா­னப்­ப­டை­யினர் வெளி­யேற வேண்டும் எனக் கோரி 25 நாட்­க­ளாகப் போராட்டம் நடத்தி வரு­கின்ற மக்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தற்­காகக் கொழும்பில் நடத்­தப்­பட்ட போராட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்கள் கருத்து வெளி­யிட்­டி­ருந்­தனர்.

இந்தப் போராட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்த இட­து­சாரி அர­சியல் தலை­வர்­களில் ஒரு­வ­ரா­கிய விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ன இரா­ணு­வத்தின் பாவ­னையில் உள்ள காணி­களை உரி­யவர்­க­ளிடம் கையளிப்போம் என தேர்தல் காலத்தில் வாக்­கு­றுதி­ய­ளித்து, தமிழ் பேசும் மக்­களின் வாக்­கு­களில் வெற்றி பெற்ற ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும், அந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­ற­வில்லை என்­பதைச் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

பொது­மக்­களின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கும், அவர்கள் எதிர்­கொண்­டுள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கா­க­வுமே நல்­லாட்சி உரு­வாக்­கப்­பட்­டது என்­பதை நினை­வூட்­டி­யுள்ள அவர், அதற்­கேற்ற வகையில் அரச தலை­வர்கள் இரு­வரும் நடந்து கொள்ள வேண்டும் என்று கொழும்பில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

அது மட்­டு­மல்­லாமல், புதிய அர­சாங்கம் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணத் தவ­றும்­பட்­சத்தில், புதிய அர­சாங்­கத்தை வீட்­டுக்கு அனுப்பி வைப்­ப­தற்கும் மக்கள் தயங்­க­மாட்­டார்கள் என்று விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ன அர­சாங்­கத்­திற்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

முன்­னைய ஆட்­சியில் இவ்­வாறு வீதி­களில் இறங்கி ஆர்ப்­பாட்டம் செய்­வ­தென்­பதும், போராட்­டங்கள் நடத்­து­வ­தென்­பதும் இல­கு­வான காரி­ய­மாக இருக்­க­வில்லை. ஆனால் ஜன­நா­யக ரீதி­யாக போராட்­டங்கள் நடத்­து­வ­தற்கு இப்­போது இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த ஜன­நா­யக வெளி குறித்து அர­சாங்கத் தரப்­பினர் பெரு­மை­யோடு கருத்து வெளி­யிட்­டி­ருக்­கின்­றனர். நல்­லாட்­சியில் மக்கள் தமது பிரச்­சி­னை­க­ளுக்­காகக் குரல் கொடுத்து போராட்டம் நடத்­து­வ­தற்கு வழி சமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது,

இந்த ஜன­நா­யக உரி­மையைப் பெற்­றி­ருப்­ப­வர்கள் கடந்த அர­சாங்­கத்தின் போது உரி­மை­க­ளுக்­காகக் குரல் கொடுக்க முடி­யா­த­வாறு அடக்கி ஒடுக்­கப்­பட்­டி­ருந்­ததை நினைவில் கொள்ள வேண்டும் என்­ற­வா­றாக அர­சாங்க அமைச்­சர்கள் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருக்­கின்­றனர்.

போராட்டம் நடத்­து­வ­தற்­கான ஜன­நா­யக வெளியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தால் மட்டும் போதாது, எதற்­காகப் போராட்­டங்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன என்­பதைக் கண்­ட­றிந்து அந்தப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்­டி­யது ஆட்­சி­யா­ளர்­களின் பொறுப்­பாகும்.

அந்தப் பொறுப்பை நல்­லாட்சி அர­சாங்கம் நிறை­வேற்றத் தவ­றி­யி­ருக்­கின்­றது. தொடர்ந்தும் தவறி வரு­கின்­றது என்­ப­தையும் கொழும்பில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்தில் கலந்து கொண்ட முக்­கி­யஸ்­தர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்கள்.

போராட்டம் நடத்த அனு­ம­தித்­தி­ருக்­கிறோம் தானே.....

காணி­க­ளுக்­கா­கவும், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கா­கவும் மட்­டு­மல்­லாமல் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்­காகப் பல­த­ரப்­பி­னரும், இந்த அர­சாங்­கத்தின் கீழ் போராட்டம் நடத்தி வரு­கின்­றார்கள்.

ஆனால், உங்­க­ளுக்கு போராட்டம் நடத்­து­வ­தற்­கான ஜன­நா­யக உரி­மையை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றோம்­ தானே, எனவே, நீங்கள் தாரா­ள­மாகப் போராட்­டங்­களை நடத்­துங்கள். எங்­க­ளுக்கு வேறு வேலைகள் இருக்­கின்­றன. அவற்றைக் கவ­னிக்­கிறோம் என்ற போக்­கி­லேயே இப்­போது அர­சாங்கம் நடந்து கொண்­டி­ருக்­கின்­றது.

கேப்­பாப்­புலவு பகுதி மக்­களைப் போலவே, நிரந்­தர நிய­மனம் கோரி, கொழும்பில் உள்ள சிறி­லங்கா டெலிகொம் நிறுவன தலை­மை­ய­கத்­திற்கு எதிரில் ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட தொழி­லா­ளர்கள் இரவு பக­லாகப் போராடி வரு­கின்­றார்கள். அவர்­க­ளு­டைய போராட்டம் 62 நாட்­க­ளாக நடந்து வரு­கின்­றது. ஆனால் டெலி­ககொம் நிறு­வ­னமோ அல்­லது அர­சாங்­கமோ அதனை உரிய முறையில் இது­வ­ரையில் கண்­டு­கொள்ள வில்லை.

அதே­போக்­கில்தான் கேப்­பாப்­பு­லவு பில­வுக்­கு­டி­யி­ருப்பு காணி விட­யத்­திலும் அர­சாங்கம் பாரா­மு­கத்­துடன் செயற்­பட்டு வரு­கின்­றது. புதுக்­கு­டி­யி­ருப்பு காணி விட­யத்­தையும் அர­சாங்கம் கண்­டு­கொள்ள வில்லை.

இந்த நிலையில், வவு­னியா மாவட்டம் வவு­னியா பிர­தேச செய­லகப் பிரி­வுக்குட்­பட்ட விக்ஸ் காட்­டுப்­ப­குதி என்ற இடத்தில் பொது­மக்கள் குடி­யி­ருந்து வரு­கின்ற காணி­களில் இருந்து அவர்­களை வெளி­யேற்­று­வ­தற்­காக மறை­மு­க­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருப்­பதை எதிர்த்து, அந்தப் பகுதி மக்கள் வவு­னியா மாவட்ட செய­ல­கத்­திற்கு முன்னால் போராட்டம் ஒன்றை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றார்கள்.

அதே­வேளை, மலை­ய­கத்தில் தேயிலைத் தோட்டக் காணி­களைத் தனி­யா­ருக்கு – குறிப்­பாக பெரும்­பான்மை இன மக்­க­ளுக்குப் பிரித்துக் கொடுப்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­களை மலை­யக மக்கள் எதிர்த்து குரல் கொடுத்­தி­ருக்­கின்­றனர். ஆனால் அவர்­க­ளு­டைய எதிர்ப்­புக்­குரல் அர­சாங்­கத்தின் செவி­களில் சரி­யான முறையில் விழ­வில்லை. அல்­லது அந்த எதிர்ப்பை அறிந்தும் அறி­யாத முறை­யி­லான போக்கில் அர­சாங்கம் நடந்து கொண்­டி­ருக்­கின்­றதோ தெரி­ய­வில்லை.

தமது எதிர்ப்­புக்கு அர­சாங்கம் கவனம் செலுத்தத் தவ­றி­யி­ருப்­ப­தை­ய­டுத்து, அந்த மக்­களும் கேப்­பாப்­புலவு மக்­களைப் பின்­பற்றி, அதே பாணியில் தொடர்ச்­சி­யான ஒரு போராட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றனர். இந்தப் போராட்டம் ஹுன்னஸ்­கிரி தோட்­டப்­ப­கு­தியில் முதலில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜன­நா­யக உரி­மை­களை நிலை­நாட்­டு­வ­தாக உறு­தி­ய­ளித்து ஆட்சி அதி­கா­ரத்­துக்கு வந்­துள்ள நல்­லாட்சி அர­சாங்கம் மக்கள் தமது உரி­மை­க­ளுக்­கா­கவும், பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­ப­தற்­கா­கவும் வீதி­களில் இறங்கிப் போரா­டு­வதை வெறு­மனே பார்த்துக் கொண்­டி­ருப்­பது அழ­கல்ல.

உண்­மை­யான ஜன­நா­யகம் என்­பது உரி­மை­க­ளுக்­காக மக்கள் போராட்­டத்தில் ஈடு­ப­டு­வதை அனு­ம­திப்­ப­துடன் நின்று விடு­வ­தல்ல. மக்­க­ளு­டைய உரி­மை­களை சரி­யான முறையில் நிலை­நாட்­டு­வ­திலும், மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தி­லுமே உண்­மை­யான ஜன­நா­யகம் தங்­கி­யி­ருக்­கின்­றது.

மக்கள் தமது உரி­மை­களை அனு­ப­விக்­க­வி­டாமல் தடுப்­பதை நல்­லாட்சி என்று கூற முடி­யாது. அவர்­களின் உரி­மை­களைப் பறித்துக் கொண்டு, அதற்­காக அவர்­களைப் போரா­டு­வ­தற்கு அனு­ம­தித்­து­விட்டு பார்த்துக் கொண்­டி­ருப்­பதை உண்­மை­யான ஜன­நா­யகம் என்று எவரும் ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள்.

மறுக்­கப்­பட்ட உரி­மைகள்

யுத்தம் முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து, பாதிக்­கப்­பட்ட மக்­களின் நலன்­க­ளுக்­கா­கவும், பொது­மக்­களின் பொது நன்­மைக்­கா­கவும் எத்­த­னையோ நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­களின் இழப்­புக்­களை ஈடு செய்­தி­ருக்க வேண்டும். உள­வியல் ரீதி­யாக அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்ற பாதிப்­பு­களைப் போக்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். பாதிப்­பு­களில் இருந்து அவர்கள் மீண்டு புதிய வாழ்க்கை வாழ்­வ­தற்­கான வச­தி­களைச் செய்­தி­ருக்க வேண்டும்.

இது­போன்ற பல்­வேறு நட­வ­டிக்­கை­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவே நல்­லி­ணக்கச் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த முன்­னைய அர­சாங்கம் இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளி­னதும், பொது­மக்­க­ளி­னதும் நன்­மை­களைக் கருத்­திற்­கொண்டு செயற்­படத் தவ­றி­யி­ருந்­தது.

புனர்­வாழ்வு நட­வ­டிக்­கைகள் என்றும் மீள்­கட்­ட­மைப்பு நட­வ­டிக்­கைகள் என்றும் மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கைகள் என்றும் அந்த அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் மக்­களின் நலன்­சார்ந்­த­திலும் பார்க்க, அர­சாங்­கத்தின் அர­சியல் நலன் சார்ந்­த­தா­கவும், அரச ஆத­ர­வா­ளர்­களின் நலன் சார்ந்­த­தா­க­வுமே அமைந்­தி­ருந்­தன.

அந்த வகை­யி­லேயே பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களைச் சேர்ந்த மக்கள் புன­ர­மைப்பு நட­வ­டிக்­கை­க­ளிலும், அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­க­ளிலும் புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். அது மட்­டு­மல்ல.., வேலைத்­திட்­டங்­க­ளுக்­கான ஒப்­பந்­தக்­காரர்­களும், வேலைத்­திட்­டங்­களை நிறை­வேற்­று­வ­தற்­கான கூலி­யாட்­க­ளும்­கூட, முன்­னைய அர­சாங்­கத்­தினால் தென்­னி­லங்­கையில் இருந்து கொண்டு வரப்­பட்­டி­ருந்­தார்கள்.

பாதிக்­கப்­பட்ட மக்­களின் பொரு­ளா­தா­ரத்தைச் சுரண்­டு­வ­தற்­காக வங்­கிகள் மட்­டு­மல்­லாமல், எல்லா வகை­யான நிதி­நி­று­வ­னங்­களும் மீள்­கு­டி­யேற்றப் பிர­தேச நக­ரங்­க­ளுக்குப் படை­யெ­டுத்து வந்து செயற்­ப­டு­வ­தற்கு முன்­னைய அர­சாங்கம் அனு­ம­தித்­தி­ருந்­தது. அதே­போன்று வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளிலும் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களைச் சேர்ந்த வர்த்­த­கர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வதைக் கைவிட்டு, வசதி படைத்த தென்­னி­லங்­கையைச் சேர்ந்த வர்த்­த­கர்­க­ளுக்கு முத­லிடம் அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. மீள்­கு­டி­யேற்றப் பிர­தே­சங்­களின் கடற்­ப­ரப்பில் உள்ளூர் மீன­வர்­க­ளி­லும் ­பார்க்க, தென்­னி­லங்­கையைச் சேர்ந்த மீன­வர்­க­ளுக்கே முத­லிடம் வழங்­கப்­பட்­டது.

இடப்­பெ­யர்வு கார­ண­மாக சொந்தக் காணி­களில் விவ­சாயம் செய்ய முடி­யாமல் பாதிக்­கப்­பட்­டி­ருந்த விவ­சா­யி­களின் வயல் நிலங்கள் தோட்­டக்­கா­ணி­களை இரா­ணுவம் ஆக்­கி­ர­மித்து விவ­சாயம் செய்­வ­தற்கும், ஆட்­க­ளில்­லாத வேளை­களில் அயல் பிர­தே­சத்தில் இருந்து வந்து விவ­சாயம் செய்த பெரும்­பான்மை இன விவ­சா­யி­க­ளுக்­குமே முத­லிடம் வழங்­கப்­பட்­டது, இதனால் உள்­ளூரில் இடம்­பெ­யர்ந்து பின்னர் மீள்­கு­டி­ய­மர்ந்­தி­ருந்த மக்­களின் வாழ்­வா­தார உரி­மைகள் பறிக்­கப்­பட்­டி­ருந்­தன.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது மக்கள் நம்­பிக்கை இழப்­பது நல்­ல­தல்ல

ஆட்சி மாற்­றத்தின் பின்­ன­ரும்­கூட இந்த நிலை­மை­களில் மாற்றம் ஏற்­ப­ட­வில்லை. பெரும்­பான்மை இன மக்­க­ளுக்கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் முன்­னு­ரி­மையும், முத­லி­டமும் அளிக்­கின்ற போக்கு இன்னும் தொடர்­கின்­றது.

இத்­த­கைய நிலை­மை­களில் எல்லாம் மாற்­றங்கள் ஏற்­பட வேண்டும். அந்­தந்தப் பிர­தே­சங்­களில் உள்­ள­வர்கள் அங்­குள்ள வளங்­க­ளை பயன்­ப­டுத்தி தமது வாழ்­வா­தார முயற்­சி­களில் ஈடு­ப­டவும், தமது வாழ்க்­கையை சிறப்­பாக அமைத்துக் கொள்­வதற்­கும் அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட வேண்டும். அதற்­கு­ரிய கட்­ட­மைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்டு அதற்­கான வழி­மு­றைகள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

பொது­மக்­களின் காணி­களில் கேந்­திர முக்­கி­யத்­துவம் மிக்க நிலை­களை அமைத்து நிலை­கொண்­டி­ருக்க வேண்­டிய தேசிய முக்­கி­யத்­துவம் மிக்க கட்­டாய சூழல் இப்­போது கிடை­யாது. தேசிய பாது­காப்­புக்­காக ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் பல்­வேறு இரா­ணுவ முகாம்கள் அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அவை போதா­தென்று, உட்­புறக் கிரா­மங்­களில் விமா­ன­பப்­டை­யி­ன­ரையும் கடற்­ப­டை­யி­ ன­ரை­யும்­கூட அர­சாங்கம் முகாம்­களை அமை த்து நிலை­கொள்ளச் செய்­தி­ருக்­கின்­றது.

இந்த வகை­யி­லேயே–ஏ –9 வீதியில் மத­வாச்­சிக்கும் வவு­னி­யா­வுக்கும் இடையில் பூனாவை பகு­தியில் கடற்­படை முகாம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. கடற்­பி­ர­தேசம் அருகில் இல்­லாத இந்தப் பிர­தே­சத்தில் கடற்­படை முகாம் ஏன் அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்று அந்தப் பிர­தே­சத்தைச் சேர்ந்த பெரும்­பான்மை இன மக்­களே புரிந்து கொள்ள முடி­யா­த­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள்.

ஆங்­கி­லேயர் காலப்­ப­கு­தி­யி­லேயே வவு­னி­யாவில் விமான ஓடு­பா­தை­யொன்று உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. அதனை இலங்கை இரா­ணு­வத்­தினர் யுத்த காலத்தில் சீரமைத்துப் பயன்­ப­டுத்தி வந்தார்கள்.

அது இப்பொழுதும் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் ஒரு விமான ஓடுபாதையை நிர்மாணித்துப் பயன்படுத்தியிருந்தார்கள். அதனை இராணுவத்தினர் தமக்கு ஏற்ற வகையில் சீரமைத்துப் பயன்படுத்துகின்றார்கள்.

அதேபோன்று முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் விமானப்படைத்தளம் ஒன்றை அமைத்து விமானப்படையினர் செயற்பட்டு வருகின்றார்கள். யுத்த மோதல்கள் இல்லாத ஒரு சூழலில் இத்தகைய இராணுவ தளங்களும், இராணுவ வளங்களும் அவசியமில்லை என்பதே இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் கருத்தாக உள்ளது.

இராணுவ தேவைக்காக அத்தகைய வளங்களை உருவாக்குவதென்றால், தேவையான அளவில் அரச காணிகளும், காடுகளும் இருக்கின்றன.

அந்தப் பிரதேசங்களில் இராணுவம் தனக்குத் தேவையானவற்றைச் செய்து கொள்வதை விடுத்து, பொதுமக்களின் காணிகளை அத்துமீறி பிடித்து வைத்துக் கொண்டு அந்தக் காணிகளை விட்டுக் கொடுக்க முடியாது என்று பிடிவாதம் பிடிப்பதும், அடாத்தான முறையில் நடந்து கொள்வதும் முறையான செயலல்ல என்பதே அந்த மக்களின் நிலைப்பாடாகும்.

இவ்வாறு மக்களுடைய நலன்களுக்கும், அவர்களுடைய நியாயமான கருத்துக் களுக்கும் முற்றிலும் விரோதமான முறையில் நல்லாட்சி அரசாங்கம் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்க ஜனநாயகமாகாது.

இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில், உண்மையான ஜனநாயக வழியில் மக்கள் தமது உரிமை களை அனுபவிக்கத்தக்க சூழலை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

ஏனெனில் முன்னைய எதேச்சதிகார அரசாங்கத்தின் போக்கிலேயே நல்லாட் சிக்கான அரசாங்கமும் நடந்து கொள்கின்றது என்ற மனப்பதிவு சிறுபான்மை இன மக்கள் மனங்களில் ஆழமாக ஏற்படுமாக இருந்தால், அது நாட்டின் எதிர்கால செயற்பாடுகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

ஏனெனில் இந்த நாட்டின் இரண்டு அதி முக்கிய தேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து உருவாக்கியதே நல் லாட்சி அரசாங்கமாகும் இந்த அரசாங்கத் தின் மீது, மக்கள் நம்பிக்கை இழப்பதென்பது இந்த நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கை இழப்பதற்கு சமமாகும்.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்