Breaking News

மே மாதம் சிறிலங்கா வருகிறார் இந்தியப் பிரதமர் மோடி



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மே மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனை இந்தியப் பிரதமர் உறுதிப்படுத்தியிருப்பதாக சிறிலங்கா அமைச்சர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஐ.நா வெசாக் நாள் எதிர்வரும் மே மாதம் சிறிலங்காவில் கொண்டாடப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஐ.நா வெசாக் நாள் நிகழ்வில் பங்கேற்க வரும் மே மாதம் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவிருப்பதை இந்தியப் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார் என்று சிறிலங்காவின் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.