விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட விதம் குறித்து பாகிஸ்தானுக்கு விளக்கம்
பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது கையாளப்பட்ட விடயங்கள் குறித்து அந்நாட்டு கடற்படையினருக்கு விளக்கமளித்துள்ளார்.
லாகூரில் அமைந்துள்ள பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கல்லூரியில் இடம்பெற்ற செயலமர்வில் அவர் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
கடந்த 30 வருட காலமாக நீடித்த யுத்தத்தை வெற்றிகொள்ள இலங்கை படையினர் கையாண்ட விதம் குறித்து இதன்போது கடற்படை தளபதி விளக்கமளித்துள்ளார்.
குறிப்பாக கடற்புலிகளின் வளர்ச்சி, அவர்களின் தாக்குதல்களை முறியடிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விளக்கிக் கூறியுள்ளார்.
இவ் விஜயத்தின்போது அந்நாட்டு கடற்படை தளபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இலங்கை கடற்படை தளபதி பேச்சுவார்த்தை நடத்தியதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.








