முள்ளிக்குள மக்களைச் சந்தித்தார் ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை - THAMILKINGDOM முள்ளிக்குள மக்களைச் சந்தித்தார் ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை - THAMILKINGDOM
 • Latest News

  முள்ளிக்குள மக்களைச் சந்தித்தார் ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை  முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து 7ஆவது நாளாகவும் இன்றும் (புதன்கிழமை) முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

  இந்நிலையில் குறித்த மக்களை நேற்றையதினம் நேரில் சென்று சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை, அவர்களது நிலைமை குறித்து கேட்டறிந்தார்.

  அத்துடன் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள மக்களின் காணிகளை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சூசை அடிகளார் உட்பட அருட்தந்தையர்கள் அடங்கிய குழுவினருடன் ஆயர் ஜோசப் சிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

  மேலும் நீண்ட நேரமாக போராட்டத்தில் ஈடுபடும் மக்களுடன் கலந்துரையாடிய ஆயர், இப்பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்புகொண்டு தீர்வுக்கான முயற்சிகளில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: முள்ளிக்குள மக்களைச் சந்தித்தார் ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top