Breaking News

போதைப்பொருள் விவகாரத்தினால் மோசமான பாதையில் பயணிக்கும் மெக்சிகோ



மெக்சிகோவில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையிலான மோதல்கள், கொலைச் சம்பவங்களை அதிகரித்துக் கொண்டிருப்பதுடன் நாட்டை மிகவும் வன்முறைகள் நிறைந்த பாதையில் அழைத்துச் செல்வதாகவும் அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தேசிய குற்ற எச்சரிக்கை அமைப்பின் புள்ளிவிபரங்களின் பிரகாரம், மெக்சிகோவில் இந்த ஆண்டில் மரண தண்டனைகள் 70 சதவீதமாக அதிகரித்துள்ள அதேவேளை கொலைக் குற்றங்கள் 29 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெக்சிகோவில் ஒவ்வொரு ஆயிரம் குடிமக்களுக்கும் 20 பேர் கொலை செய்யப்படுவதாக தேசிய குற்ற எதிர்ப்பு அமைப்பின் இயக்குநர் சான்டியாகோ ரூல் தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்காவிலிருந்து கடத்தப்படும் போதைப் பொருட்களுக்கான முக்கிய துறைமுகமாக கருதப்படும் குரேரெரோ (Guerrero) போன்ற தென் பசுபிக் மாநிலங்கள் மற்றும் தமவ்ளிபஸ் (Tamaulipas ) போன்ற வடக்கு எல்லை மாநிலங்கள் போன்றன போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. இத்தகைய மாநிலங்களிலேயே அதிக அளவில் குற்றச் செயல்களும் இடம்பெறுகின்றன.

மெக்சிகோவில் நடந்த கொலைச் சம்பவங்களில் 70 சதவீதத்திற்கும் மேலானவை திட்டமிடப்பட்ட கொலைகள் என்றும் தெரிவிக்கப்படுகின்றன.

மெக்சிகோவில் இடம்பெறும் போதைப்பொருள் விவகாரங்களினால் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.