Breaking News

மதவாச்சியில் விபத்து : மதகுரு உள்ளிட்ட இருவர் பலி



மதவாச்சி பூணாவை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மதகுரு உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்து ள்ளனர்.

மதவாச்சி பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற வேன் ஒன்று எதிர் திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதுண்டதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டி சாரதியும் இதில் பயணம் செய்த பௌத்த மதகுருவொருவரும் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் வேனில் பயணித்த நால்வர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.