மூதூர் சம்பவத்தை இனவாதமாக்க வேண்டாம்!
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் மூன்று சிறுமிகள் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சம்பந்தமாக எவரும் மனக்கிலேசம் அடைய தேவையில்லை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
அதேபோல் எந்த ஒரு காரணத்திற்காகவும் குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிட முடியாது எனவும், இதனை கொண்டு இனங்களுக்கு இடையில் பதற்றத்தை தோற்றுவிக்க கூடாது எனவும் அவர் கேட்டுள்ளார்.
இவை தொடர்பில், உரிய பொலிஸ் அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளதாகவும், இந்த துர்பாக்கிய சம்பவம் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளை முதல்நாளில் இருந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் நிமல் பெரெரா, பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் சந்திரகுமார மற்றும் மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.