Breaking News

மைத்திரி – மஹிந்த இணைவு சாத்தியமற்றது, பேச்சுவார்த்தை என்பது பொய்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேரடி கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கு இரு தரப்புக்கும் இடையில் எந்தவித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லையென தான் மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்வதாக மஹிந்த சார்பு பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடுத்ததாகவுள்ள ஸ்ரீ ல.சு.க. சிரேஷ்ட உறுப்பினர் தான் எனவும், இது தொடர்பில் தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் இதுபோன்ற எந்தவொரு கலந்துரையாடலையும் நடாத்தவில்லையெனவும், இது போன்ற பேச்சுவார்த்தைகள் இடம்பெற மாட்டாது என தான் உறுதியாக குறிப்பிடுவதாகவும் குமாரவெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.