Breaking News

மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ்மான்



பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்மான். இவர் ஸ்பெயின் நாடடின் முன்னணி கால்பந்து கிளப்பான அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசன் முடிந்த பிறகு இங்கிலாந்து நாட்டின் தலைசிறந்த கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மாறுவார் என்ற செய்தி வந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது ‘‘மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு செல்ல 60 சதவீதம் (6/10) வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், அட்லெடிகோ மாட்ரிட் கிறிஸ்மானை விடுவிக்க விரும்பவில்லை. அவருடன் 2022-ம் ஆண்டு வரை ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளது. இதனால் கிறிஸ்மான் மான்செஸ்டர் யுனைடெட் செல்லும் வாய்ப்பு இல்லாமல் போனது. இந்த செய்தி மான்செஸ்டர் யுனைடெட் அணி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கிறிஸ்மான் கூறியதால், மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதற்காக கிறிஸ்மான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.