Breaking News

கைகளிலுள்ள பக்டீரியாக்களைக் கொல்ல வெந்நீரை விட குளிர்ந்த நீரே சிறந்தது



கிருமிகளைக் கொல்வதற்காக கை கழுவ வெந்நீரை விட குளிர்ந்த நீரே சிறந்தது என அமெரிக்காவின் ரட்ஜெர்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டொனால்ட் ஸ்கர்பனர் தலைமையிலான விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உணவு சாப்பிடும் போது கை கழுவுவது வழக்கமாக உள்ளது. ஆனால், சிலர் வெந்நீரில் மட்டுமே கைகளைக் கழுவுகின்றனர். இதன் மூலம் பக்டீரியாக் கிருமிகள் அழிந்து விடும் என நம்புகின்றனர்.

”அவ்வாறு அவர்கள் கருதுவது தவறு. குளிர்ந்த நீரில் கை கழுவினாலும் பக்டீரியாக் கிருமிகள் அழியும், கைகளில் உள்ள பக்டீரியாக்களை நீக்க கைகளை 10 விநாடிகள் கழுவினாலே போதும்,” என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பக்டீரியாக்களை அழிக்க வெப்பம் தேவையில்லை. வெந்நீரை விட குளிர்ந்த தண்ணீரே அதிக சக்தி கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.