Breaking News

வடமாகாண சபையில் இன்று முக்கிய அறிக்கையொன்று முன்வைப்பு


வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கை வடமாகாண சபையில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட குழு, இந்த விசாரணைகளை நடத்தியது.

இதற்கமைய குறித்த அறிக்கை கடந்த மாதம் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அது சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளில் வடமாகாணத்தின் ஐங்கரநேசன் மற்றும் குருகுலராசா ஆகிய இரண்டு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை பதவி நீக்கவும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து வடக்கு முதலமைச்சரின் கருத்தை பெறமுடியவில்லை.எனினும், இன்று சபையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.