Breaking News

விடுதலைப்புலிகள் மீதான தடை நீங்கியது-ஐரோப்பிய நீதிமன்றம் அதிரடி!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில்
இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத அமைப்பு பட்டியல் வெளியிடப்பட்டது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இவ்வாறான அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் 13 தனிப்பட்ட நபர்களும் 22 அமைப்புகளும் அடங்கும்.

பாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தின் பெயரை பயங்கரவாதத் தடைப் பட்டியலில் தொடர்ந்தும் வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ள ஐரோப்பிய உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழாம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரை குறித்த தடைப் பட்டியலில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டிருக்கின்றது.

அறிக்கையை முழுமையாப படிக்க கிளிக் செய்யுங்கள்

ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஹமாஸ் ஆகிய இயக்கங்களை பயங்கரவாதத் தடைப்பட்டியலில் இணைத்து அவர்களின் சொத்துக்களை முடக்கியது சட்டவிரோதமானது என தெரிவித்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு தீர்ப்பினை அறிவித்திருந்தது.

இந்தத்தீர்பிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டிருந்த மேன்றையீட்டை ஆராய்ந்துவந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கம் மீதான தடை நீக்க உத்தரவிற்கு எதிராக தீர்ப்பளித்துள்ள போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் சரியானது என அறிவித்துள்ளது.

இதற்கமைய கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயர் நீக்கப்படுவதுடன் அதன் மீதான தடை மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த உத்தரவிற்கு அமைய பிரித்தானியா உட்பட 28 உறுப்பு நாடுகளில் முடக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் சொத்துக்களும் விடுவிக்கப்படும் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமாத்திரமன்றி தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தனர் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருந்தவர்களின் வழக்குகளிலும் மேன்றையீடுகளை மேற்கொண்டு அவர்களை விடுவிக்க வாய்ப்பும் கிட்டியுள்ளதாகவும் சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக 2009 ம் ண்டு மே மாதம் 18 ம் திகதி தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைப் பட்டியலில் இணைத்திருப்பதற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ஆராய்ந்திருந்த ஐரோப்பிய நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு வழங்கியிருந்த தீர்ப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்தை நிரூபிப்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால், விடுதலைப் புலிகள் அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

ஐரோப்பிய நீதிமன்றின் இந்த உத்தரவு சரியானது என தீர்ப்பளித்துள்ள ஐரோப்பிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இதற்கமையவே தடைப் பட்டியலில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்

இந்த வழக்கை தமிழீழ செயற்பாட்டாளர் லதன் சுந்தரலிங்கமே தலைமையேற்று நடாத்தி வெற்றியும் கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.