Breaking News

ஸ்ரீலங்கா எதிர்காலத்தில் மிகக் கொடூரமான யுத்தத்தை சந்திக்க நேரிடும்

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெ ழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெ டுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்து ள்ளார். அத்தனகல்லை திகாரிய அல் அஸ்கர் மத்திய கல்லூரியின் புதிய மூன்று மாடி கட்டடத் தொகுதியை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்று ம்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

நாட்டின் அனைத்து இனங்கள் மத்தியிலும் சமாதானத்தையும் ஐக்கியத்தை யும் கட்டியெழுப்பி நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை தவிர்ப்ப தற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு இடை யூறுகளை ஏற்படுத்தும் அனைவரும் எதிர்காலத்தில் ஒரு கொடூர யுத்தத்திற்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 

தேசிய நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்ட த்தை சிலர் குழப்ப முற்படுகின்றபோதும் தேசிய நல்லிணக்க கொள்கையை வெற்றிபெறச் செய்வதன் மூலமே நாட்டில் நிலையான சமாதானம் சாத்திய மாகுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

2013ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டு இது வரை நிர்மாணிக்கப்படாத நிலை யில் உள்ள பாடசாலை கட்டிடம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. பாடசாலை கட்டடம் அல்லது வேறு எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் உரிய நிதி ஏற்பாடுகள் இன்றி அடிக்கல் நடப்படக் கூடாதென அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவித்தார். 

அக் கட்டட நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு மாகாண கல்வி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, மாணவர்களின் கோரிக்கையின் பேரில் புதிய தொழில்நுட்பக்கூடத்தை அமைப்பதற்கு 20 மில்லியன் ரூபா நிதியை வழங்குவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  உத்தரவிட்டார்.