Breaking News

மைத்திரி – ரணிலை இன்று அவசரமாகச் சந்திக்கிறது கூட்டமைப்பு!

யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நில வரங்கள் தொடர்பாக கலந்துரையா டுவதற்கு தமிழ்த் தேசியக்கூட்ட மைப்பு சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகி யோரை இன்று அவசரமாகச் சந்திக்கின்றது.


இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கின் பாதுகாப்புச் சூழல் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து தருமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் எழுதியுள்ளார். 
இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின் பின்னர் நாங்கள் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்து இளைஞர்களின் கைதுகள், பிராந்திய பாதுகாப்புச் சூழல் மற்றும் ஆவா குழுவின் செயற்பாடுகள், மக்கள் எதிர்கொண்டுள்ள அச்சமான சூழல் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளோம்.

அத்துடன், ஆவா குழுவுடன் இளைஞர்கள் இணைந்தமைக்கான காரண ங்களை கண்டறிய வேண்டியது காவல்துறையினர் பொறுப்பு. இதன் மூலம், ஆவா குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது இலகுவாக இருக்கும். இது பல மாதங்களாக இருந்தாலும், இதுதொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

மக்கள் இளைஞர்களின் இதுபோன்ற செயற்பாட்டை விரும்பவில்லை. இத்தகைய குற்றச்செயல்களில் உண்மையாகவே தொடர்புபட்டிருப்பவர்க ளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை நாம் தடுக்கப் போவதில்லை. அதற்கும் நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை” என தெரிவி த்துள்ளார்.