Breaking News

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பதற்றம்! ஒருவர் காயம்!

கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை அசாதாரண நிலை ஏற்பட்டி ருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பல்கலைக்கழகத்தின் நிர்வாக பகு தியை மாணவர்கள் கட்டுப்பாட்டு க்குள் கொண்டுவந்ததன் காரணமாக அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று மாலை பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களின் பகுதி மற்றும் நிர்வாகப்பகுதிகளை மாணவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திரு க்கின்றனர். 

இதன்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டு செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. 

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தபோதிலும் இரவு 08.00மணி வரையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாண வர்களில் சில பிரிவினர் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டுவந்த நிலையில், நேற்று பிற்பகலும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.