Breaking News

மூடப்பட்டது கிழக்கு பல்கலைக்கழகம்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்ட க்களப்பு, வந்தாறுமூலையின் ஆறு பீடங்களும் இன்றுமுதல் மறு அறி வித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ள தாக கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம் தெரி வித்தார். நாளை 12 மணிக்கு முன்னர் அனைத்து மாணவர்களும் வெளி யேற வேண்டும் என்று பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார். கிழக்கு பல்கலைக்கழத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் இரண்டா ம் ஆண்டு மாணவர்களால் தங்குமிட வசதி கேட்டு போராட்டங்கள் நடத்த ப்பட்டு பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரிவு முடக்கப்பட்டு போராட்டம் நடாத்தப்பட்டது.