அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்!

அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசே! அரசியல் தீர்மானம் ஒன்றின் மூலம் அரசியல் கைதிகளை விடு தலை செய்!, பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கு, சிதைக்காதே சிதைக்காதே தமிழர் வாழ்க்கையை சிதைக்காதே, வடக்கில் திட்டமிட்டு வீண் பதற்றத்தினை உருவாக்காதே!, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கு, எமது நிலம் எமக்கு வேண்டும்,
எமது கடல் எமக்கு வேண்டும், போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறும், நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெ டுத்தார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கன்னியாஸ்திரிகள், பங்குத் தந்தையர்கள் உட்பட சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, தமிழர் ஆசிரியர் சங்கம், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் எனப் பலர் கலந்துகொண்டனர்.