இளஞ்செழியனை போன்ற உத்தமர்கள் நாட்டிற்கு தேவை: முன்னாள் இராணுவ தளபதி
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை போன்ற உத்த மர்கள் நாட்டிற்கு அவசியமென, முன்னாள் இராணுவ தளபதியான ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். மேல் நீதின்றத்தில் நீதிபதி இளஞ்செழியனுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே, தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நல்லூர் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாது காவலர் உயிரிழந்ததோடு, மற்று மொரு உத்தியோகத்தர் காயமடைந்தார்.
இச் சம்பவத்தின் போது நீதிபதி நடந்து கொண்ட விதத்தை பாராட்டியதேரர், நீதிபதிக்கு ஆசியும் வழங்கியுள்ளார். அத்தோடு, இருவரும் நினைவுப் பரிசில்க ளையும் பரிமாறிக்கொண்டனர்.











