ஐநா தீர்மானங்களை நிறைவேற்ற அழுத்தங்களை பிரயோகிக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் அதிகாரியிடம் -- சம்பந்தன் கோரிக்கை! - THAMILKINGDOM ஐநா தீர்மானங்களை நிறைவேற்ற அழுத்தங்களை பிரயோகிக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் அதிகாரியிடம் -- சம்பந்தன் கோரிக்கை! - THAMILKINGDOM
 • Latest News

  ஐநா தீர்மானங்களை நிறைவேற்ற அழுத்தங்களை பிரயோகிக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் அதிகாரியிடம் -- சம்பந்தன் கோரிக்கை!

  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐநாவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அர சாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கு மாறு அமெரிக்க காங்கிரஸ் கட்சி அதி காரி ப்ரயன் புரக் இடம்  வலியுறுத்தி யுள்ளார். 

  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொ ண்டுள்ள அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான ப்ரயன் புரக் இனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தனது அலுவலகத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடியபோதே ஐநா தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். . 

  இனப்பிரச்சனைக்குத் தீர்வு என்பதில் அரசாங்கம் மேற்கொள்ளும் இழுத்தடிப்பு, காணிகள் விடுவிப்புத் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதி களை நிறைவேற்றாமை தொடர்பிலும் இரா.சம்பந்தன் ப்ரயன் புரக்கிற்கு எடுத்துரைத்தததுடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காது இருத்தல்.  

  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் விளக்கமளித்துள்ளார். 

  விரைவில் யாவற்றையும் நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்குமாறும் அமெரிக்க காங்கிரஸ் அதிகாரியிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரியுள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஐநா தீர்மானங்களை நிறைவேற்ற அழுத்தங்களை பிரயோகிக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் அதிகாரியிடம் -- சம்பந்தன் கோரிக்கை! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top