Breaking News

இலங்கையுடன் ஆக்கபூர்வமான உறவுகளை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதாக கனடா அறிவிப்பு

இலங்கையுடன் ஆக்கபூர்வமான உற வுகளை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதாக கனடா அறிவித்து ள்ளது. வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்டு(Chrystia Freeland) டன் சந்திப்பு நடாத்தியுள்ளார். 

 பிலிப்பைன்ஸின் மனிலா நகரில் தற்போது நடைபெற்று வரும் 24ம் ஆசியான் மாநாட்டிற்கு சமாந்திரமாக இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. 

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்ள நட வடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 தாம் பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் முதல் தடவையாக இலங்கையுடன் உயர்மட்ட அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கனேடிய வெளி விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். 

ஆக்கபூர்வமான அடிப்படையில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்ள முயற்சி எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் நட வடிக்கைகள் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ராஜாங்க அமைச்சர் சேனாநாயக்க, கனேடிய அமைச்சருக்கு தெளிவூட்டியுள்ளார்.