Breaking News

பாலச்சந்திரன் சிறிலங்காப் படையினராலேயே படுகொலை – எரிக்சொல்கெய்ம்!

தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் சிறிலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்டு, சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் எனத் தான் வலுவாகச் சந்தேகிப்பதாக முன்னாள் நோர்வேத் தூதுவர் எரிக்சொல் கெய்ம் தெரிவித்துள்ளார். 
சர்வதேச ஊடகம்ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், விடுதலைப் புலி களின் தலைவர் பிரபாகரன் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. 

 ஆனால், அவரது கடைசிமகன் பாலச்சந்திரன் சிறிலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டார் என வலுவாகச் சந்தேகிக்கின்றோம். இது சிறிலங்கா இராணுவத்தின் பொறுப்பற்றதும் மோசமான செயலுமாகும். இந்த விடயத்தில் சிறிலங்கா படையினர் மிகமிக நன்றாகச் செயற்படாதது துரதிஸ்டம்” என கூறியுள்ளார்.