ஆசிய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற தமிழன்(காணொளி) - THAMILKINGDOM ஆசிய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற தமிழன்(காணொளி) - THAMILKINGDOM
 • Latest News

  ஆசிய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற தமிழன்(காணொளி)

  தென் கொரியாவின் சோல் நகரில் இடம்பெற்ற 51ஆவது

  ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஷ்பராஜ் மிஸ்டர் ஏசியா (Mr.ASIA) மகுடத்தை வென்றுள்ளார்.

  ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையொருவர் வெற்றிப் பெற்றது இதுவே முதன்முறையாகும். அதாவது ஆசியாவின் ஆணழகன் போட்டியில் பங்குபற்றி ”மிஸ்டர் ஆசியா” பட்டத்தினைப் பெற்ற முதல் இலங்கை தமிழர் புஸ்பராஜ் விளங்குகிறார்.

  மிஸ்டர் ஏசியா போட்டி பட்டத்தை வென்றதுடன் முன்னதாக நடத்தப்பட்ட 100 கிலோ எடைப்பிரிவிலும் லூசியன் புஷ்பராஜ் வெற்றிப்பெற்றுள்ளார். ஆசிய ஆணழகர் போட்டிகளில் 26 நாடுகளைச் சேர்ந்த 350இற்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  ஆசிய ஆணழகன் மகுடம் வென்ற லூசியன் புஷ்பராஜ் இற்கு வாழ்த்துக்கள்!
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஆசிய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற தமிழன்(காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top