கிளிநொச்சி வைத்தியசாலையில் மனநல மருத்துவப் பிரிவிற்கான கட்டடத் தொகுதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. - THAMILKINGDOM கிளிநொச்சி வைத்தியசாலையில் மனநல மருத்துவப் பிரிவிற்கான கட்டடத் தொகுதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. - THAMILKINGDOM
 • Latest News

  கிளிநொச்சி வைத்தியசாலையில் மனநல மருத்துவப் பிரிவிற்கான கட்டடத் தொகுதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

  இன்று காலை வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோ ரால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மனநல மருத்து வப் பிரிவுக்கான கட்டடத் தொகுதி மற்றும் வைத்திய நிபுணர்கள் விடுதி ஆகியன மங்கள விளக்கேற்றலுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளன.  புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டு ள்ளன. வடக்கு மாகாண சபையின் 17 தசம் 3 மில்லியன் ரூபா குறித்தொது க்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட மன நல மருத்துவப் பிரிவு கட்டிடத் தொகு தியும் (மருத்துவ உபகரணங்கள் அடங்கலாக) 14 தசம் 6 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட வைத்திய நிபுணர்கள் விடுதியும் திறந்து வைக்க ப்பட்டன. 

  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

  இந் நிகழ்வில் வடக்கு முதலமைச்சருடன் சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன்,முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், மாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம், வை.தவநாதன், மாகாண சுகாதாரப் பணிப்பாளா் கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் மைதிலி உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்துள்ளனர். 


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கிளிநொச்சி வைத்தியசாலையில் மனநல மருத்துவப் பிரிவிற்கான கட்டடத் தொகுதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top