துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ள இந்திய அணிக்காக ராகுல் அரைச்சதம்
இன்று ஆரம்பமாகிய இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இர ண்டாவது டெஸ்ட் போட்டியில், முத லில் துடுப்பெடுத்தாடிய இந்தியஅணி மதிய உணவு இடைவேளை யின்போது , ஒரு விக்கெட் இழப்பில் 101 ஓட்டங்களை எடுத்துள்ளது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ராகுல் ஆட்டமிழக்காமல் 53ஓட்டங்களுடன் களத்தில் நிற்கின்றார் . இத்தொடரில் இரண்டாவது தடவையாக பூவா தலையா போட்டதில் வென்ற கோலி , தனது அணி துடுப்பாடுவதையே தெரிவு செய்திருந்தார்
தமது அணியில் மேலதிகமாக ஒரு சுழல் பந்துவீச்சாளரை இணைக்க விரும்பிய இலங்கை அணி, மகிந்த புஸ்பகுமார என்பவருக்கு, முதல் தடவையாக டெஸ்ட் போட்டி ஒன்றில் கலந்து கொள்ள வாய்ப்பளித்து ள்ளது .
30வயதான இவர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, இது வரை யில் 500விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த அனுபவசாலி ஆவார் .
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரான முகுந்த் காய்ச்சல் காரணமாக அணி யிலிருந்து நீக்கப்பட்டு , அவரிடத்தில் ராகுல் இணைக்கப்பட்டுள்ளார்/
துடுப்பாட்ட வீரர் புஜாராவுக்கு இது 50வது டெஸ்ட் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது