குர்திஷ்தானின் பொதுசன வாக்கெடுப்பில் ஈழத்தமிழர்கள் உத்வேகம் - பிரதமர் வி.உருத்திரகுமாரன் - THAMILKINGDOM குர்திஷ்தானின் பொதுசன வாக்கெடுப்பில் ஈழத்தமிழர்கள் உத்வேகம் - பிரதமர் வி.உருத்திரகுமாரன் - THAMILKINGDOM

 • Latest News

  குர்திஷ்தானின் பொதுசன வாக்கெடுப்பில் ஈழத்தமிழர்கள் உத்வேகம் - பிரதமர் வி.உருத்திரகுமாரன்

  குர்திஷ்தானின் பிராந்தியத்திய மக்க ள பொதுசன வாக்கெடுப்பு, சுயநிர்ண ய உரிமைக்காக போராடி வரும் ஈழ த்தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையி னையையும் உற்சாகத்தினையும் வழ ங்கியுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அர சாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமா ரன் குறிப்பிட்டுள்ளார். 

  ஈராக்கின் சுயாட்சி பிராந்தியமான குர்திஸ்தான் மக்கள் தமது தனிநாட்டு க்கான பொதுசன வாக்கெடுப்பினை முன்னெடுத்திருந்தனர். ஈராக்க, துருக்கி, சிரியா ஆகிய நாடுகளது எதிர்ப்பின் நெருக்கடிகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட பொது வாக்கெடுப்பில் வெற்றிக் கொண்டாட்டங்கள் உலகெங்கும் உள்ள குர்திஷ்தா ன் அமைப்புக்களினாலும் மக்களினாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. 


  அமெரிக்காவின் நியு யோர்கில் அமைந்துள்ள குர்திஷ்தான் தூதரகத்தின வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்க த்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், குர்திஷ்தான் மக்களுக்கும் குர்தி ஷ்தான் தேசத்துக்கும் ஈழத்தமிழர் தேசத்தினதும் மக்களினதும் வாழ்த்து க்களை வழங்கியுள்ளனர். 


  குர்திஷ்தானின் தூதுவர் Ms. Bayan Sami Abdul Rahman அவர்களுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமி ழீழ அரசாங்கத்தின் நட்பினையும் தெரிவித்ததுடன் பிரதமர் வி.உருத்திர குமாரன் அவர்கள், குர்திஷ்தான் தொ லைக்காட்சி ஒன்றுக்கு கருத்துரை வழங்கியபோது, ஈழத்தமிழ் மக்களது அரசியல் தீர்வுக்கான பொறி முறை யாக பொதுவாக்கெடுப்பு ஒன்றினை வலியுறுத்தும் "YES TO REFERENDUM" எனும் அமைப்பினை நாம் செயற்படுத்தி வருவதாக தெரியப்படுத்தியுள்ளார். 

  தமிழீழம் உள்ளடங்கியதான அனைத்து தீர்வுத் திட்டங்களையும் உள்ளடக்கி, தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து, அவர்கள் தெரிவு செய்யும் உரிமை யினைப் பயன்படுத்தும் வகையில் ஈழத் தமிழ்மக்களிடத்தில் பொது வாக்கெ டுப்பு நடத்த வேண்டுமென்பதே பிரதான விடயமாகும். 

  தமிழீழமாக அமையும் இலங்கைத்தீவின் வடகிழக்கு பகுதியில் சட்ட பூர்வ மாக வாழுகின்ற மக்களிடயேயும், தமிழீழத்தினை பூர்வீக தொடர்புடையவர்க ளாக இலங்கைத் தீர்வுக்கு வெளியே வாழும் மக்களிடையேயும் வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும் என்பதும் எமது நிலைப்பாடாக அமைந்துள்ளது.

  இந்நிலையில் குர்திஷ்தான் மக்களது தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெ டுப்பு ஈழத்தமிழ் மக்களுக்கு புதிய நம்பிக்கையினையும் உட்வேகத்தையும்  ஏற்படுத்தியுள்ளதாக தெரியப்படுத்தியுள்ளார். 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: குர்திஷ்தானின் பொதுசன வாக்கெடுப்பில் ஈழத்தமிழர்கள் உத்வேகம் - பிரதமர் வி.உருத்திரகுமாரன் Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top