தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் -12 ம் நாள் நல்லூரில் அணையாத தீபமாய் ! - THAMILKINGDOM தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் -12 ம் நாள் நல்லூரில் அணையாத தீபமாய் ! - THAMILKINGDOM

 • Latest News

  தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் -12 ம் நாள் நல்லூரில் அணையாத தீபமாய் !

  1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போ ராட்டத்தில் மகத்தான சரித்திரம் ப டைத்த நாள். 1987ம் ஆண்டு செப்ரெ ம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தா ன சரித்திரம் படைத்த நாள் தமிழ் ம க்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்னி ட்டு 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தினான்.

  உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு உயிர் துறந்த திலீபன் வரலாற்றில் தனிஇடம் பெற்று விட்டான். 

  உயிர் துறந்த பின்னும் கூட மக்களுக்கு பயன்பட எண்ணியதால் தான் இறந்த தும் தனது உடலை யாழ் மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்ற அவனது இறுதி விருப்பத்தின் பேரில் வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை அம்மன் கோவில் முன்றலில் திரண்டடிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் செப்ரெம்பர் மாதம் 28ம் திகதி விடுதலைப்புலிகளினால் யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீட வைத்திய கலாநிதி சிவராஜாவிடம் திலீபனது உடல் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. 

  தமது இறுதி அஞ்சலியை செலுத்தக் கூடியிருந்த மக்களில் பலர் துன்பம் தாழாது மயங்கி விழுந்தனர் சோக ஒலி தமிழீழம் எங்கும் எதிரொலித்தது

     

  தியாக தீபம் திலீபன் அண்ணா வரலாறு 1  
   தியாக தீபம் திலீபன் ஆவணப்படம்  
   மாவீரன் திலீபன் பாடல்கள் - 1 தலைவரின் உரை 26 09 1987
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் -12 ம் நாள் நல்லூரில் அணையாத தீபமாய் ! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top