கிளிநொச்சியில் எந்தவொரு நிகழ்விற்கும் பிரதம விருந்தினர் நானே! - சிறிதரன் உத்தரவால் கல்லூரி நிகழ்ச்சி ரத்து - THAMILKINGDOM கிளிநொச்சியில் எந்தவொரு நிகழ்விற்கும் பிரதம விருந்தினர் நானே! - சிறிதரன் உத்தரவால் கல்லூரி நிகழ்ச்சி ரத்து - THAMILKINGDOM

 • Latest News

  கிளிநொச்சியில் எந்தவொரு நிகழ்விற்கும் பிரதம விருந்தினர் நானே! - சிறிதரன் உத்தரவால் கல்லூரி நிகழ்ச்சி ரத்து  எதிர்வரும் 02.10.2017 அன்று கிளிநொச்சி இராமநாதபும் மகாவிதியாலயத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தியைமுன்னிட்டு பாடசாலைசமூகம் வைரவிழாநிகழ்வை ஏற்பாடுசெய்திருந்தது.

  இந்த நிகழ்வுக்கு வடக்கு மாகாண முதலமைச்சரோ அல்லது கல்வி அமைச்சரோ அழைக்கப்படாமல் நிகழ்வுஏற்பாட்டுக்குழுவால் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டதை தொடர்ந்து பாடசாலையின் பழையமாணவர்களில் ஒருபகுதியினரும், ஊர் சமூக அமைப்புக்களும் இணைந்து வடக்குமாகாண கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே நிகழ்வு இடைநிறுத்தப்பட்டதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


  வைரவிழாவுக்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அழைக்கப்பட்டதை பாடசாலையின் பழையமாணவர் சங்கம் விரும்பாதபோதும் பாடசாலை அதிபரை அழைத்துப் பேசிய குறித்தபாராளுமன்ற உறுப்பினர் குறித்த நிகழ்வுக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சரையோ, முதலமைச்சரையோ அழைக்கவேண்டாம் எனவும் தன்னை பிரதம விருந்தினராக அழைக்குமாறும் தான் குறித்த விழாவின் நிகழ்வுக்கு இரண்டுலட்சம் பணம் தருவதாகவும்,மேலும் ஒரு மாடிக்கட்டிடம் கட்டுவதற்காக 5 மில்லியன் ரூபா பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிடம் இருந்து பெற்றுத் தருவதாகவும் குறிப்பிட்டதால் அதிபர், சிவஞானம் சிறிதரனை பிரதம விருந்தினராக அழைக்க சம்மதம் தெரிவித்த நிலையில் பாடசாலையின் பழையமாணவர்களும் பாடசாலையின் சில ஆசிரியர்களும் அதற்கு எதிரப்புத்தெரிவித்தே வடக்கு மாகாண கல்வி அமைச்சில் முறையிட்டதாகவும் அதற்கு அமையவே குறித்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

  இதனிடையே இந்தவிடயம் குறித்து நேற்று வெள்ளிக் கிழமை வடக்கு மாகாண கல்வி அமைச்சில் இடம் பெற்ற கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் விடயத்தை வடக்கு கல்வி அமைச்சர் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும் ஆலோசனைக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் குறித்த நிகழ்வை உடனே இடைநிறுத்தி பாடசாலையின் அனைத்து சமூகங்களின் முழு ஒத்துழைப்புகிடைக்கும் பட்சத்தில் வேறு ஒரு நாளில் நிகழ்ச்சியை நடாத்துவதற்கு அனுமதி வழங்குமாறும் வடக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு ஆலோசனைவழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கிளிநொச்சியில் எந்தவொரு நிகழ்விற்கும் பிரதம விருந்தினர் நானே! - சிறிதரன் உத்தரவால் கல்லூரி நிகழ்ச்சி ரத்து Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top