Breaking News

முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்பு - அமைச்சர் ரிஷாட் பதியூதின் கோரிக்கை

இன்றைய வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக  முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்பி னை பெற்றுக்கொடுக்க யு.எஸ்.எய்ட் நிறுவனம் விசேட கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியூதின் கோரிக்கை விடுத்துள்ளார். 

முன்னாள் போராளிகள் திறமையும் ஆற்றலும் மிக்கவர்கள்  பலர் தொழி ல்வாய்ப்பின்றி முடங்கிக் கிடக்கின்றனர்.  எனினும் இளம் வயதிலேயே, கல்வியை நிறுத்திக்கொண்டதால், கல்வித்தகைமைகளை பெற்றுக்கொள்ள முடியாத துரதிர்ஷ்டம் இவர்களுக்கு இன்றைய நிலையில் பாரிய இழப்பை ஏற்படுத்தி யுள்ளது. 

இதனால் முன்னாள் போராளிகள் தொடர்பில் யு.எஸ்.எய்ட் நிறுவனம் விசேட கவனம் செலுத்தி ஆக்கபூர்வமான திட்டங்களை செயற்படுத்துவதற்கு உதவ முன்வரவேண்டுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை கோரியுள்ளார்.  

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் யு.எஸ். எய்ட் நிறுவனத்தின் ஸ்ரீலங்காவிற்கான பிரதித் தலைவர் எலிசபத் டெவினி எஸ்டட்சிற்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இவ் வேண்டுதலை விடுத்துள்ளார். 

லங்கா சதொச உட்பட கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவ னங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மனித வள நுட்பங்களை அதிகரிக்கும் வகையிலான திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க இரா ச்சிய முகவரகம் (யு.எஸ்.எய்ட்) நிறுவனம் உதவியளிக்க முன்வந்துள்ளது. 

தனியார் துறையினரின் நடவடிக்கைகளுக்கே தமது நிறுவனம் ஊக்கம ளித்தும் உதவியளித்தும் வருவதாக தெரிவித்த யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதித் தலைவர், தனியார் துறையினரின் வளர்ச்சி மற்றும் தனியார் சந்தைகளின் ஊக்குவிப்பு தொடர்பில் மனிதவளப் பயிற்சியையும், நுட்ப திறனையும் தமது நிறுவனம் செயற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். 

இலங்கையில் யாழ்ப்பாணம், கண்டி, காலி ஆகிய இடங்களில் துறைசார்ந்த பயிற்சி நிலையங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும், நேரடியாக இப் பயிற்சி களை தாங்கள் வழங்குவதில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.