Breaking News

வான் படை வரலாற்று தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவில் இன்று !

தமிழர்களின் வான்படை வரலாறு ஆனது கேணல் சங்கர் அவர்களின் பெயருடன் இணைந்த வாழ்வானது. 

விடுதலைப்புலிகள் விமானப் படையணி யை தொடங்கிய கனடாவின் விமானப் பொறியியல் கல்லூரியில்  வான்படைக்கான கற்கைநெறியை நிறைவுசெய்த கேணல் சங்கர் அவர்கள் பின்னா ளில் உலகமே வியந்த வான்படையணியை உரு வாக்குவதில் அத்திவாரமாக செயற்பட்டபோது தளபதியாக கேணல் சங்கர் நியமிக்கப்பட்டிரு ந்தார். 

ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவு ஆரம்பிக்கப்பட முன்னர் கடல்புறா என்ற பெயரில் விடுதலைப்புலிகளின் கடல்சார் நடவ டிக்கைகள் இடம் பெற்றகாலத்தில் கடல்புறா வின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் செயற்பட்டிருந்தார். அதன் பின்பு
இந்திய இராணுவத்துடன் போர் ஏற்பட்டபோது தலைவரோடு இருந்து காட்டு ப்போர்முறையின் நுணுக்கங்களை தானும் கற்று போராளிகளுக்கும் கற்பித்து தலைவர் பிரபாகரன் அவர்களுடனே வாழ்ந்தவர். 

அமைதியான மென்மையாக சிரிக்கும் சங்கர் அண்ணாவையே எல்லோருக்கு ம் தெரியும். ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமையினால் வழங்கப்படும் எந்தப்பணியையும் மிகவும் கவனம் எடுத்து சிறப்பாக செய்து முடிக்கும் அவ ரது ஆளுமையையும் சக போராளிகளு டனும்  நட்புறவை வளர்த்துக்கொள்ள க்கூடிய தோழமையையும் கண்டுகொ ள்ளக்கூடிய சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைத்திருக்காது. 

கேணல் சங்கர் அண்ணாவை 2001 ஆம் ஆண்டின் தொடக்கப் பகுதியில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வலிந்த இராணுவ தாக்குதல்களாக இருந்தாலும் சரி முன்னேறி வரும் இரா ணுவத்தினரை மறித்துத் தாக்கும் பாதுகாப்பு படை நடவடிக்கைகளாக இருந்தா லும் சரி அவற்றின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் அப்படை நடவடிக்கை யில் ஏற்பட்ட வெற்றி தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டறிய இராணு வப் பகுப்பாய்வு நடைபெறுவது வழக்கம். 

ஓயாத அலைகள் – 03 நடவடிக்கை மூலம் தமிழீழத் தாயகத்தின் பெரும்பகுதி கள் விடுவிக்கப்பட்டபோது பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லவேண்டுமென தலைவர் திட்டமிட்டிருந்தார். 

அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு நவீன போர்ப்பயி ற்சிகள் அத்தியாவசியம் எனக்கருதி சிறப்பு இராணுவப் பயிற்சிகளைப் பெறுவதற்காக வெளிநாட்டிலிருந்து பயிற்சியாளர்கள் அழைக்கப்பட்டிருந்த னர்.  
பயிற்சியாளர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை தமிழில் மொழி மாற்றி விளங்கப்படுத்தியவர் சங்கர் அண்ணா. இயக்கச் செயற்பாடுகளின் இரகசியம் கருதியும் நடைபெற்று க்கொண்டிருந்த பயிற்சிமுகாமின் மு க்கியத்துவம் கருதியுமே தலைவர் அவர்களால் சங்கர் அண்ணாவுக்கு மேலதிகமாக அப்பணி வழங்கப்பட்டி ருந்தது. வான்படையின் தளபதியாக வெளியே உலாவந்த சங்கர் அண்ணா பயிற்சி முகாமில் எங்களுடனே இருந்தார். “இயக்கத்தால் சொல்லப்படும் எந்த வேலையென்றாலும் சிறப்பாகச் செய்துமுடிக்கவேண்டும்” என்பதேஅவர் எப்போதும் சொல்லும் வார்த்தைகள். எதையுமே தத்துவங்களூடாக விளங்க ப்படுத்துவதைக் காட்டிலும் நேரிலே அறிந்துகொள்ளும்போது உள்ளத்தில் ஆழமாக பதிந்துகொள்ளும்.

அதனையே சங்கர் அண்ணாவும் செய்து காட்டினார். காடு சார்ந்த பயிற்சிகள் நடாத்துவதற்கான இடங்களைப் பார்ப்பதற்காக 03 கிலோமீற்றர் அளவு தூரம் நடந்து ஒரு குளத்தைச் சென்றடையவேண்டும். நாங்கள் மூன்று பேர் பயி ற்சியாளர்களுடன் ஜி.பி.எஸ்.ஸின் துணையுடன் சென்று கொண்டிருந்தோம்.

நாங்கள் செல்வதற்கு முன்பாகவே சங்கர் அண்ணா திசைகாட்டி(compass) யின் உதவியுடன் அங்கே சென்றடை ந்து விடுவார். நாங்கள் சென்ற போது சிரித்துக்கொண்டே வரவேற்றமை பயிற்சியாளர்களுக்கே ஆச்சரிய த்தைக் ஏற்படுத்தியது. 

முன்னர் இந்திய இராணுவத்தினருட னான போரின்போது தாங்கள் எவ்வாறு மணலாற்று காடுகளுக்குள் செயற்பட்டோமென வெளிப்படுத்தினார். அக்காலத்தில் திசைகாட்டியின் உத வியுடன் மட்டுமே காடுகளுக்குள் இடங்களைச் சென்றடையவேண்டும். 

கொஞ்சம் இடம்மாறி போய்விட்டாலும் இந்திய இராணுவத்தினருடன் முட்டு ப்பட வேண்டி வரும். அவ்வாறு இந்திய இராணுவத்தினரோடு ஏற்பட்ட மோத லில் காயமடைந்த பெண்போராளியை தாங்கள் எவ்வாறு மீட்டு வந்தோம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். 

குறிப்பிட்ட மீட்பு நடவடிக்கைக்கு சங்கர் அண்ணாவின் தனித்திறமைகளே கைகொடு த்திருந்தது என்றே குறிப்பிடலாம். சங்கர் அண்ணாவின் இவ்வி சேட திறமைகளை ப்பற்றி தலைவர் அவர்கள் வெளிப்படையாக பாராட்டியதுடன் மட்டுமன்றி அதனை ஆவ ணப்படுத்தியும் உள்ளார் என்பது குறிப்பிடத்த க்கது.

  விடுதலைப்போராட்ட பயணத்தில் போராட்ட அனுபவங்கள் என்பவை முக்கி யமானவை. ஒவ்வொரு களத்திலும் ஏற்படும் தோல்வியும் வெற்றியும் அடுத்த களத்திற்கான செயற்பாடுகளைச் செம்மைப்படுத்தும். போராட்டகளத்தில் ஏற்படும் அனுபவங்கள் புதிய போர்வீரர்களுக்குச் சொல்லப்படவேண்டும். தனது போரியல் அனுபவங்கள் மற்றவர்களுக்குப் பாடமாக அமையவேண்டும் என்பதில் சங்கர் அண்ணா எப்போதும் நிதானமாகச் செயற்பட்டவர்.