Breaking News

ம.தி.மு.க. சுய ஆட்சி மாநாட்டிற்கு தி.மு.க.வுக்கு வைகோ அழைப்பு!

ம.தி.மு.க. சுயாட்சி மாநாட்டில் கல ந்து கொள்ள தி.மு.க.வுக்கு அழைப்பு கோரப்படுமென ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளா ர். தமிழகத்தில் தேர்தலை சந்திக்க தி.மு.க. தலைமையில் பலமான கூ ட்டணியை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆளும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா வுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணிகள் முன்னே றியுள்ளன.

ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தி.மு.க. வுடன் கைகோர்க்க ஆயத்தமாகியுள்ளன.

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்து கொள்ள தி.மு.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை ஏற்று மு.க. ஸ்டாலின் கலந்துள்ளார்.

அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந் திகதி ம.தி.மு.க. சார்பில் சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெறுகின்றது.  காமராஜர் அரங்கில் நடைபெறும் இம் மாநாட்டில் கலந்து கொள்ள தி.மு.க.வுக்கு அழைப்பு விடுக்கப்படுமென ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. அழைக்கும் பட்சத்தில் அந்த மாநாட்டில் தி.மு.க.வும் பங்கேற்பது உறுதி. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற கொள்கையை திணிக்க நினைக்கும் மத்திய பா.ஜனதா அரசை கண்டிப்பதாக குறிப்பிட்ட வைகோ மத்திய அரசின் இம் முடிவையும், மாநிலங்களின் உரிமையை பறிக்கும் நடவடிக்கையையும் கண்டித்தே இம் மாநாடு இடம்பெறுவதாக தெரிவித்து ள்ளார்.

எனவே நாடு முழுவதிமுள்ள பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளை மாநாட்டு க்கு அழைக்க முடிவுரைத்துள்ளனர். 

அகாலி தளம், தேசிய மாநாட்டுக்கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகியவற்றை யும் அழைக்க இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் பா.ஜனதாவுக்கு எதிராக பலமான கூட்டணியை உருவாக்கும் வகையில் இந்த மாநாட்டில் தேசிய அளவிலான பல தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க ப்படுகின்றது. 

பா.ஜனதாவில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான யஸ்வந்த் சின்ஹாவையும் அழைக்க ஆலோசித்துள்ளதாக  வைகோ தெரிவித்துள்ளார்.