Breaking News

அவுஸ்ரேலியா தேர்தலில் கனகனப்பு இளம் தலைவர் பிரதமர் பதவி வகிப்பாரா?....

அவுஸ்ரேலியாவில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறு ப்பாக இடம்பெற்றதுடன் அங்கு 31 வயது இளம் தலைவர் பிரதமர் ஆவா ரா என கேள்வியெழுந்துள்ளது. ஐரோ ப்பிய நாடுகளில் ஒன்று, அவுஸ்ரே லியா. வியன்னாவை தலைநகராக கொண்ட இந் நாட்டில் 183 இடங்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு அக்டோபர் 15-ந் திகதி (நேற்று) தேர்தல் நடத்தப்படுமென  தெரிவிக்கப்பட்டிருந்தது. இத் தேர்தல், அந் நாட்டில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தலில் அத்தனை பேரின் கவனத்தையும் கவர்ந்து வருபவர், 31 வயதான இளம் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ்தான். இவர், ஓ.வி.பி., என்றழைக்கப்படுகின்ற பழமைவாத மக்கள் கட்சி யின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய கூட்டணி அரசில் வெளியுறவு மந்திரி பதவி வகிக்கிறார். அந்த நாட்டின் மிக இளம் வயது வெளியுறவு மந்திரி  பெயரை  பெற்றுள்ளார். இக் கட்சிதான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்குமென கருத்துக்கணிப்பு முடி வுகள் தெரிவிக்கின்றன. 

இரண்டாவது இடத்துக்கு எப்.பி.ஓ. என்னும் தீவிர வலதுசாரி சுதந்திரா கட்சியும், சமூக ஜனநாயக கட்சியும் (சோஷியல் டெமாக்ரட்ஸ்) போட்டியில் ஈடுபடுகின்றன. 

 தற்போது பிரதமராக உள்ள சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் கிறிஸ்டியன் கெர்ன் (51), செபாஸ்டியன் குர்ஸ்சின் பழமைவாத மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துத்தான் ஆட்சி நடத்துகின்றனர். 

இக் கூட்டணியில் தொடர முடியாது என்று செபாஸ்டியன் குர்ஸ் போர்க்கொடி உயர்த்தியதின் விளைவாகத்தான் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது. இத் தேர்தல் பிரசாரத்தில் அகதிகள் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக உருவெடுத்தது. 

பொருளாதார வளர்ச்சி, புதிய வேலை வாய்ப்புகள், சமூக நீதி ஆகியவற்றுக்கு ஆதரவாக பிரசாரத்தின்போது, செபாஸ்டியன் குர்ஸ் குரல் கொடுத்தார். இந்த தேர்தலில் 64 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். 

காலையில் வாக்குப்பதிவு தொடங்கியபோது, வாக்குச்சாவடிகளில் குறை வான கூட்டம் காணப்பட்டதாகவும், பின்னர் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்து நின்று வாக்கு போட்டதாகவும், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்த தாகவும் வியன்னாவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி செபாஸ்டியன் குர்ஸ்சின் பழமைவாத மக்கள் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தால், அந்தக் கட்சி தீவிர வலதுசாரி சுதந்திரா கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

1980-களில் இருந்தே அவுஸ்ரேலியாவில் தொடர்ந்து கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகின்றது. அப்படி செபாஸ்டியன் குர்ஸ், பிரதமர் பதவிக்கு வந்தால் ஐரோப்பிய நாடுகளில் மிக இளம் வயது தலைவர் என்ற சிறப்பை பெற முடி யும்.