Breaking News

கணவனையும் மகனையும் தேடி ஒன்பது வருடங்கள் கடந்தும் முடிவில்லை தாயொருவர் மரணம்!

காணாமல் ஆக்கப்பட்ட கணவரையும் அன்பான மகனையும் தேடியலைந்து 9 வருடங்கள் போராடியும் முடிவு கா ணமுடியவில்லையே என்ற ஏக்கத்து டன் தாயொருவர் மாரடைப்பினால் இன்று அதிகாலை சாவடைந்துள்ளா ர். 

கடற்படையின் இரகசிய முகாமில் கணவரதும், மகனினதும் அடையாள அட்டைகள் காணப்பட்டதையடுத்து, குறித்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கொழும்பில் கடற்படையின் இரகசிய முகாமில் கண்டெடுக்கப்பட்ட 12 அடையாள அட்டைகள் தொடர்பான வழக்கு தொடுக்க ப்பட்டுள்ளது. 

 அவ் வழக்கின் சாட்சிகளில் ஒருவரான காணாமல் ஆக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த நபரின் தாய் ஜெசிந்தா பீரீஸ் அவர்கள் காலமாகியுள்ளார். இறுதியாக கடந்த கிழமை வழக்கிற்கு சென்று வந்த அவர் அடுத்த தவணை தன்னால் வரமுடியாதெனவும் வழக்கை ஏனையவர்களைப் பாருங்கள் என கூறிச் சென்றார் என ஏனைய சாட்சிகள் குறிப்பிடுகின்றன. 

தனது கணவனுக்கும், மகனுக்கும் என்ன நடந்ததெனத் தெரியாத நிலையில் குறித்த தாயாரும் இன்று அதிகாலை யாழ். போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.