வழக்குகளை வவுனியாவிற்கு மாற்ற நீதிமன்றில் மனு - மூன்று கைதிகள்
அனுராதபுர சிறைச்சாலையில் கடந்த ஒரு மாதமாக உண்ணாவிரதப் போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளும், தமக்கு எதிரான வழக்குகளை மீளவும் வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் அளித்துள்ளனர்.
அனுராதபுர மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ள தமது வழக்குகளை மீண்டும் வவுனியா மேல்நீதிமன்ற த்துக்கு மாற்றி உத்தரவிடக் கோரி, இராசதுரை திருவருள், சுலக்சன், கணேசன் தர்சன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகளும், நேற்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் அளித்துள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் தொடுக்கப்ப ட்டுள்ளன. இவர்களுக்கு எதிரான சாட்சிகளாக 67 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இவர்களில் 64 பேர் சிறிலங்கா காவல்துறையினர் மற்றும், இராணுவத்தின ராவர்.
சாட்சிகளுக்குப் பாதுகாப்பு அல்ல எனக் கூறி, இவர்களின் வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அனுராதபுர மேல்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.
இதனை எதிர்த்து, அவர்கள் கடந்த ஒரு மாதமாக உண்ணாவிரதப் போராட்ட த்தை மேற்கொண்டு வருகின்ற போதிலும், சிறிலங்கா அரசாங்கம், வழக்கு களை மாற்ற முன்னேற்பாடுகளை எடுக்கவில்லை.
இந் நிலையில், நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்து ள்ள மூன்று அரசியல் கைதிகளும், “அனுராதபுரவில் எமக்கு எந்த உறவினர்க ளோ நண்பர்களோ இல்லை.
எமக்கு தமிழ் மொழி மட்டுமே பேச முடியும். இதனால் அனுராதபுர நீதிமன்ற த்தில் வழக்குகளை நாம் எதிர்கொள்வதும், எமக்கான சட்டவாளரைப் பெறு வதும் கடினம்.
எனவே அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் நியாயமான விசா ரணை நடக்காது என்று நம்புகிறோம்.” எனத் தெரிவித்துள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களமும், குற்றப் புலனாய்வுப் பிரிவும் இம் மனுவில் பிரதி வாதிகளாக உள்ளமை தெரிவிக்கத்தக்கதாகும்.








