அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனி உள்ளூராட்சி சபை கோரி போராட்டம் ! - THAMILKINGDOM அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனி உள்ளூராட்சி சபை கோரி போராட்டம் ! - THAMILKINGDOM

 • Latest News

  அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனி உள்ளூராட்சி சபை கோரி போராட்டம் !

  அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தை தனி உள்ளூராட்சி சபையாக மாற்றுமாறு கோரி அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமூகத்தினர் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். 

  எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூரா ட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலை யில், இப்போராட்டம் தீவிரமடைந்து ள்ளது. கடந்த திங்கட் கிழமையிலி ருந்து இன்று புதன்கிழமை வரை தமது கடைகளை மூடி இப்போரா ட்ட ம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றத னால், அங்கு இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது பிரதேச பள்ளி வாசல்கள் நிர்வாகம், உலமா சபை மற்றும் பொது அமைப்புகள் கூடி இது தொடர்பான தீர்மானத்தை எடுத்திருந்தன. 

  சாய்ந்தமருது பிரதேசத்தில் அனுஷ்டிக்கப்படுகின்ற கடையடைப்பு போரா ட்டம் காரணமாக அனைத்து கடைகளும் தனியார் நிறுவனங்களும் மூடப்ப ட்டுள்ளன. அரசாங்க வங்கிகள் மற்றும் பாடசாலைகள் இயங்கவில்லை. 

  வீதிகளிலும் பொது இடங்களிலும் கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. அம்பாறையில் தனி முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஒன்றாக சாய்ந்த மருது காணப்படுகின்றது. 

  இப்பிரதேசத்திற்கு வருகை தரும் அரசியல் வாதிகள் அனைவரிடமும் இக்கோ ரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் வாக்குறுதிகளை வழங்கி னார்கள். எனவும், ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் சாய்ந்த மருதுவைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனி உள்ளூராட்சி சபை கோரி போராட்டம் ! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top