Breaking News

தமிழ் மக்களின் நீதிகளை புறக்கணிப்பதால் தமிழ் மக்கள் கொந்தளிப்பு - சிவமோகன்

பெரும்பான்மையான சிங்கள இனம் எமது சமாதான கரங்களை புறக்கணி த்தால் தமிழ் மக்கள் தனித்து நின்று போராட வேண்டிய நிலை மீண்டும் உருவாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகா சம் சிவமோகன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடிய மாவீரர்களது தியாகங்கள் என்றுமே வீண் போகாது என நாடாளுமன்ற உறு ப்பினர் தெரிவித்துள்ளார்.  முல்லைத்தீவு மாவட்டத்தின் சிலாவத்தை இளம்பறவை விளையாட்டுக் கழகம் நேற்றைய தினம் நடத்திய உதை ப்பந்தாட்ட போட்டி நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து உரையாற்றுகையில்  இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தமிழ் இனம் ஒடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்திலிருந்து தமிழ் மக்கள் மீண்டெழுவார்களா எனும் சந்தேகம் காணப்பட்டதாக தெரிவித்த நாடா ளுமன்ற உறுப்பினர், தற்போது உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியல் அமைப்பில் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணம் உள்ளிட்ட தமிழ் மக்க ளுக்கான அதிகாரங்கள் அனைத்தும் தீர்வாக கிடைக்கப் பெறுமா என்ற கேள்விக்குறியுடன் செயற்பட வேண்டியதாக குறிப்பிட்டுள்ளார்.