Breaking News

வட்டுவாகல் பாலத்தில் மக்கள் வீதிமறிப்பு போர் அலையில் இன்று !

முல்லைத்தீவு மாவட்டம் வட்டு வாகல்,  முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியை உள்ளடக்கி மக்களுக்கு உரி த்தான 617 ஏக்கர் காணிகளை கைய கப்படுத்தி கிழக்கு கடற்படை வலய த்துக்குட்பட்ட கோத்தபாய கடற்படை கப்பல் கடற்படை தளத்துக்கு இன்றை ய தினம் நிரந்தரமாக காணி சுவீகரிப்பு பணிகள் நடைபெறவிருந்த நிலையில், குறித்த காணிகளுக்கு உரித்தான மக்கள் கடற்படை முகாம் அமைக்க நிரந்த ரமாக காணி சுவீகரிப்பு அளவீடுக்கு அனுமதி வழங்க முடியாதென வீதிம றிப்புப் போரில் குதித்துள்ளனர்.  
கடந்த வர்த்தமானி அறிவித்தலில் குறித்த கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணி சுவீகரிக்கப்பட இருப்பதாக அறிவித்தல் வந்த நிலையில், இன்றைய தினம் காணி அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருந்தன. 

இதனை அறிந்த மக்கள் குறித்த கடற்படை முகாமுக்கு முன்பாக உள்ள வட்டுவாகல் பாலத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் (எ35) பரந்தன் முல்லைத்தீவு வீதி ஊடான போக்குவரத்து அரை மணி நேரத்துக்கும் அதிகமாக தடைப்பட்டிருந்தது. 
இதனை அடுத்து, வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பொ லிஸார் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வீதிமறியலை கைவிடுமாறு கோரிய போதும் மக்கள் தொடர்ந்தும் வீதிமறியல் போராட்டத்தில் ஆர்ப்ப ரி த்தனர்.

அதன்பின்பு, மக்களை சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் இன்று நடைபெற இருந்த குறித்த காணி சுவீகரிப்பு தொடர்பான அள வீட்டு பணிகள் இன்று நடைபெறமாட்டாதென தெரிவித்ததோடு உரியவர்க ளுக்கு காணி உரிமையாளர்களின் கோரிக்கை தொடர்பில் தெரிவிப்பதாக உறு தியளித்ததை தொடர்ந்து போராட்டம் மக்களால் கைவிடப்பட்டுள்ளது. 

குறித்த மக்களின் போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கலந்துகொண்டு மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.  

இறுதி யுத்தத்துக்கு பின்னர் குறித்த கடற்படை முகாம் மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டதோடு கடற்படைமுகாம் நவீன வடிவில் பாரிய படைத்தள மாக அமைக்கப்பட்டுள்ளது. 

இந் நிலையில் குறித்த கடற்படைத்தளத்துக்கு நிரந்தரமாக காணி சுவீகரிப்பு நடைபெற பல முறை அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலை யில் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பி டத்தக்கது.