Breaking News

எமக்கு வாக்­க­ளிக்­காவிட்­டாலும் பரவா­யில்லை புதிய அர­சியல் யாப்பை எதிர்க்க கைகோ­ருங்கள்

தேர்­தல்­களில் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணிக்கு நீங்கள் வாக்­க­ளிக்­கா­விட்­டாலும் பிரச்­சினை இல்லை. ஆனால் தமிழ் இனத்­துக்கு முழுக்க முழுக்க பாத­க­மான முறையில் கொண்டு வரப்­படும் புதிய அர­சியல் யாப்பை எதிர்ப்­ப­தற்கு மக்­க­ளா­கிய நீங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி­யோடு கைகோர்க்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­திரகுமார் பொன்­னம்­பலம் கோரிக்கை விடுத்தார். முல்­லைத்­தீவு புதுக்­கு­டி­யி­ருப்பில் நேற்­றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் மாவட்ட பணி­மனை திறப்பு விழாவும் மக்­க­ளு­ட­னான சந்­திப்பும் நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார். 

மேலும் அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், தேசம்,தாயம்,சுய­நிர்­ணயம் என்ற கொள்­கையே எமது இனத்தின் 65 வரு­ட­கால அர­சியல் கட்­சி­க­ளி­னதும் கொள்­கை­யாகும். 

தமிழர் தேசம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு இணைந்த வடக்கு கிழக்கு தாய­கத்தில் சுய­நிர்­ணய உரிமை என்ற அடிப்­ப­டையில் ஒரு தீர்வு காண­வேண்டும் என்­பதே அது. இது தமிழ் தேசிய மக்கள் முன்­னணி உரு­வாக்­கிய கொள்கை அல்ல.

 கடந்த காலத்தில் தமிழர் அர­சி­யலில் இதுவே இருந்து வந்­தது இந்த கொள்கை 51 ஆம் ஆண்­டி­லி­ருந்தே வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது. தந்தை செல்­வ­நா­யகம் தலை­மையில் இலங்கை தமி­ழ­ரசு கட்சி முதல் தட­வை­யாக தேசம் என்ற அந்­தஸ்த்­தைப்­பற்றி பேசியது ,சுய­நிர்­ண­யத்­தைப்­பற்றி பேசியது. 

இந்த கோட்­பாட்டை சரி­யான முறையில் விளங்கி கொள்­ளாது வெறும் கட்சி அர­சி­யலில் மட்டும் ஈடு­ப­டு­வ­தாக அமைந்தால் நாம் அழிவோம். அதையும் தாண்டி தான் நாங்கள் சொல்­கின்றோம் இந்த கோட்ப்­பாடு என்­பது தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி­யி­னு­டை­யது அல்ல. 

தமி­ழ­ரசு கட்­சியில் தொடக்கி படிப்­ப­டி­யாக வளர்ந்து தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களும் இதை கடைப்­பி­டித்து இந்த கொள்கை வளர்ந்து வந்­தி­ருக்­கின்­னர். இன்­றைக்கு தனி நாட்­டுக்கு மாற்­றீ­டாக எங்­க­ளு­டைய இனப்­பி­ரச்­சி­னைக்கு ஐக்­கிய இலங்­கைக்குள் தீர்வு காண­வேண்­டு­மே­யானால் இந்த கொள்­கையின் அடிப்­ப­டையில் தீர்வு எட்­டு­வ­தன்­மூலம் மட்­டும்தான் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண முடியும். 

 நாம் இவ்­வ­ளவு காலமும் தமி­ழ­ருக்கு இனப்­பி­ரச்­சினை ஒன்று இருக்­கின்­றது என்ற விட­யத்தை உல­கத்­துக்கு பேச கூடி­ய­தாக இருப்­ப­தற்­கான அடிப்­படை காரணம் இலங்­கையில் மூன்று அர­சியல் அமைப்­பு­களை இது­வ­ரையில் உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றார்கள்.

இந்த மூன்று அர­சியல் அமைப்­பு­க­ளுக்கும் தமிழ் மக்கள் தமது ஆத­ரவை கொடுக்­க­வில்லை. ஆனால் முதல் தட­வை­யாக வர இருக்­கின்ற இந்த புதிய அர­சியல் அமைப்பு ஒரு ஒற்­றை­யாட்சி அர­சியல் அமைப்­பாக இருக்கும் நிலை யில் தமிழ் மக்­க­ளு­டைய சொந்த தலை­வர்­களே நீங்கள் இதை ஆத­ரி­யுங்கள் என தமிழ் மக்­க­ளிடம் சொல்லி தமிழ் மக்கள் இதை ஆத­ரித்தால் அதற்கு பிறகு இனப் பிரச்­சி­னையை பற்றி கதைத்து பிர­யோ­சனம் இல்லை. 

ஏனென்றால் நாங்­க­ளா­கவே விரும்பி இங்கே ஒரு அர­சியல் அமைப்பை கொண்­டு­வந்து விடுவோம். இந்த நிலை­மை­யி­லி­ருந்து தமிழ் மக்­களை காப்­பாற்­ற­வேண்டும்.

தமிழ் தேசிய கூட்ட்­ட­மைப்பு கூட தமது தேர்தல் காலத்தில் தேசம் தாயகம் சுய­நிர்­ணயம் என கூறித்தான் வாக்கு கேட்­டார்கள்.51ஆம் ஆண்­டி­லி­ருந்து எமது மக்கள் இந்த கொள்­கைக்­கா­கவே வாக்­க­ளித்­தார்கள். 

எனவே எமது தமிழ் மக்கள் வழங்­கிய ஆணையின் பிர­காரம் பார்த்தல் இந்த புதிய அர­சியல் அமைப்பு என்­பது எமக்கு ஏற்­ற­தான தீர்­வல்ல எமது மக்கள் கால­காலம் வழங்­கிய ஆணைக்கு முற்­றிலும் மாறா­கத்தான் இந்த புதிய அர­சியல் அமைப்பு இருக்­கின்­றது.

இதுதான் உண்மை .தமிழ் மக்கள் போருக்கு பின்னர் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பு உரு­வாக்­கிய தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு என்று அவர்­களின் கொள்­கை­யுடன் இந்த கூட்­ட­மைப்பு செயற்­படும் என்ற நம்­பிக்­கையில் தேர்­தல்­க­ளிலும் அவர்­க­ளுக்கு தமது ஆணையை வழங்கி வரு­கின்­றார்கள்.

ஆனால் மக்­களின் இந்த நம்­பிக்­கையை துஸ்­பி­ர­யோகம் செய்து தெளி­வாக ஒரு ஒற்­றை­யாட்­சிக்கு எமது மக்­க­ளையே ஏமாற்றி எமது கைகளை நீட்டி ஆத­ர­வ­ளிக்க பண்­ணு­வ­தற்க்­கான வேலைத்­திட்­டத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இறங்­கி­யுள்­ளது. 

இது தமிழ் தேசிய மக்கள் முன்­னணி மட்டும் சொல­வ­தாக இருந்தால் இது கூட்­ட­மைப்­புக்கும் எமக்­கு­மான முரண்­பாட்டின் பிர­தி­ப­லிப்பு என்று சொல்­வார்கள். 

ஆனால் கூட்ட்­ட­மைப்­புக்­குள்­ளையே இருக்­கக்­கூ­டிய வட­மா­காண முத­ல­மைச்சர் உட்­பட கூட்­ட­மைப்­புக்குள் இருக்­கின்ற ஒரு கட்­சியும் அத்­தோடு வடக்கு கிழக்கில் உள்ள ஒட்­டு­மொத்த சிவில் சமூக அமைப்­பு­களும் இந்த அர­சியல் அமைப்பினரும் முற்­றாக நிரா­க­ரித்­துள்­ளனர். 

இதுதான் உண்மை. உண்­மையில் நாம் ஏற்று­கொள்­ளக்­கூ­டிய அம்­சங்­க­ளான தேசம், தாயகம், சுய­நிர்­ணயம் என்ற அடிப்­ப­டை­யி­லான சமஷ்டி தீர்வு வரு­மாக இருந்தால் நாமும் அதை விரும்­பியே ஆத­ரிப்போம். 

இதற்­கான வேலை­களை நாம் தற்போது ஆரம்பித்துள்ளோம் மக்களுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டு வருகின்றோம்.எனவே தேர்தல்களின்போது எமக்கு வாக்களிக்காமல் வேறு கட்சிகளுக்கு நீங்கள் வாக்களியுங்கள். அது எமக்கு முக்கியமில்லை. 

ஆனால் எமக்கு முற்றும் பாதகமான இந்த அரசியல் அமைப்பு யாப்புக்கு எதிராக எமது பயணத்தில் இணையுங்கள். இந்த யாப்பை புறக்கணியுங்கள் என உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.