Breaking News

மணமகளின் சேலை முந்தானை மாணவர்கள் கைகளில் !

கிண்ணஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பதற்காக மணமகளின் சேலை முந்தானை யின் ஓரத்தை பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்தி காட்சிப்படுத்திய விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணை க்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

சிறுவர்களை சித்திரவதைக்கு உட்ப டுத்திய குற்றச்சாட்டில் சிறுவர் பாது காப்பு அதிகார சபைக்கு முன்வைக்க ப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பி க்கப்பட்டிருந்தன. 

கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி கண்டி – கன்னொருவ பிரதேசத்தில் சிங்களத் திருமணமொன்றில் மணமகளின் சேலை முந்தானை சுமார் 3 கிலோ மீற்ற ருக்கு தைக்கப்பட்டு கிண்ணஸ் சாதனைக்கான முயற்சி மேற்கொள்ளப்ப ட்டிருந்தது. முந்தானையை ஏந்திக் கொள்வதற்காக கண்டி நகரிலுள்ள மகளிர் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 250 மாணவிகள் அழைக்கப்பட்டு, நடு வீதி யில் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.  

அதன் பின்னர் மாணவிகளின் கைகளுக்கு சேலை முந்தானையை ஏந்திக் கொள்வதற்காக வழங்கப்பட்டது. எனினும் மாணவிகளை இந்த கிண்ணஸ் சாதனை முயற்சியில் ஈடுபடுத்துவதற்காக முறையான அனுமதி கோரப்பட வில்லை என்றும், இது சிறுவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் மற்றும் மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் செயற்பாடு எனவும் விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருந்த போதிலும் இந்த கிண்ணஸ் சாதனை முயற்சி இடம்பெறும் திருமண நிகழ்வில் விசேட விருந்தினராக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க மற்றும் மாகாணத்திற்கும், மாவட்டத்திற்கும் பொறுப்பாக பொலிஸ் உயரதிகாரிகள், மாணவிகளின் பெற்றோர் உட்பட பலரும் கலந்து கொண்டி ருந்தமையும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது. 

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் முறைப்பாடுகள் சிவில் அமைப்புக்க ளால் பதிவு செய்யப்பட்டதை இதனையடுத்து 1995ஆம் ஆண்டு 22ஆம் இலக்க குற்றவியல் சட்டக் கோவையின் 308ஆவது பிரிவின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

விசாரணைகளிடையே மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் பி.டி. விஜயரத்ன, ஊவா மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதுடன், புதிய செயலாளராக ரத்நாயக்க நியமிக்கப்பட்டார். 

இந் நிலையிலேயே விசாரணை அறிக்கை தற்போது சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பதிலை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை எதிர்பார்த்துள்ளது.