யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ். பல்கலைக்கழக நடவடி க்கைகளை முடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாண வர் ஒன்றியம் தற்போது போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக குறிப்பிட்டு ள்ளது.
மேலும் போராட்டத்தை புதிய வடிவங்களில் செயற்படுத்த முடிவுரைத் தீர்மானமாகவுள்ள தாகவும் கைதிகள் நீதிக்காக யாழ் பல்கலை கழக மாணவர்களுடன் இணைந்து போராடு வோமென தமிழ் அரசியல்வாதிகள் வழங்கிய உறுதிமொழியை அடுத்து கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவி க்கின்றனர்.
இந் நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் தாம் மேற்கொண்டு வரும் நிர்வாக முடக்கல் போராட்டத்தை இடைநிறுத்தி, அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான புதிய போராட்ட வடிவங்களை செயற்படுத்தவுள்ளதாக பகீரங்கமாக தெரிவி த்துள்ளனர்.









