Breaking News

முகநூலில் படம் பதிவேற்றியவர், பகிர்ந்தவர் மீது பொலீசார் விசாரணை

இந்தப் படம் சொல்லும் செய்தி அனைவராலும்
உணர்ந்து சிந்திக்க வேண்டியது. இந்த புகைப்படம் வவுனியா வடக்கு பிரதேச சபையில் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றிய இரண்டு நபர்களுக்கு எதிராக வவுனியா பொலிஸில் குறித்த வவுனியா வடக்கு பிரதேச செயலரினால்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த படம் தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதாக சொல்லப்படுகின்றபோதும் அண்மைக்காலமாக இளைஞர்கள் பொதுவெளியில் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துவருவதும் சமூக பிரச்சனைகளை தட்டிக்கேட்டு வருவதோடு குறித்த இளைஞர்கள் அண்மையில் தமது சகோதரன் விதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்தை எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் ஒருசில நண்பர்களுடன் துப்பரவு செய்துள்ளமையும்  இங்கு குறிப்பிடத்தக்கது. 

அரசாங்கம் தொடர்பான நடைமுறைகள் கொள்கைகள், மற்றும் அரச இயந்திரத்தில் தவறு இருந்தால் சுட்டிக்காட்ட ஒரு நாட்டின் பிரஜைகளுக்கு பூரண சுதந்திரம் உள்ளது. மக்களுக்காக தான் அரசாங்கமே தவிர அரசாங்கத்திற்காக மக்கள் இல்லை. தவறினை ஏற்கும் மனப்பான்மை சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்போது ஏற்படப்போகிறதோ தெரியவில்லை. குறித்த இளைஞர் ஊடகவியலாளர் ஜெரா அவர்களின் சகோதரர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் முகநூல் பதிவு என்பதற்கு அப்பால் எதிர்வரும் மாவீரர் தினம் மற்றும் உள்ளூராட்சி தேர்தலை மையமாக வைத்தே இளைஞர்களை பயமுறுத்தும் ஒரு செயற்பாடாகவே பார்க்கமுடிகின்றது.