Breaking News

ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜரானதை விவரித்த - பிரதமர் ரணில்

பிணைமுறி தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையி லேயே தான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி விளக்கமளித்ததாக பிர தமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் விவரிப்பு

“நான் பிரதமராகப் பதவி வகித்த கால கட்டத்தில் மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல், வாங்கல் நடவடிக்கைகள் குறித்த விசாரணைக்கு ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகி விளக்க மளித்துள்ளேன். இதற்கு நான் முழு மையான ஒத்துழைப்பை வழங்கியு ள்ளேன். எனினும் 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலத்தில் மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறிகள் கொடுக்கல் வாங்கல்கள் விசாரணை க்குட்படுத்தப்படவுள்ளன. 

“மேலும் பாராளுமன்றுக்குத் தெரியாமல் அல்லது அறிவிக்காமல் பெருந்தொ கைக் கடன்கள் பெறப்பட்டுள்ளன. நிதி தொடர்பான கொடுக்கல் வாங்கல் அனைத்து நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை பாரா ளுமன்றம் கொண்டுள்ளது. 

அவ்வாறிருக்கையில் பாராளுமன்றத்திற்குத் தெரியாமல் மஹிந்த ராஜபக்ச வின் ஆட்சிக்காலத்தில் பெருந்தொகையான கடன்கள் பெறப்பட்டுள்ளன. 

அதனாலேயே நாட்டின் கடன்சுமை அதிகரித்துள்ளது. எனவே, பாராளு மன்ற த்திற்கு தெரியாது பெறப்பட்ட வெளிநாட்டு கடன்கள் தொடர்பிலும் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விவ ரித்துள்ளார்.