சாட்சியாளர்களாக மைத்திரி – மஹிந்த தொடரா, முறிவா ?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இன்று ஒரே இடத்தில் சந்தித்துள்ளனர்.
இராஜாங்க நிதியமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தனவின் புதல்வர் தென் மாகாண சபை உறுப்பினர் பசத யாப்பா அபேவர்தனவின் இன்றைய திருமண நிகழ்வில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் தரப்பில் சாட்சியாளர்களாக முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் கையொப்பமிட்டு சாட்சியமளித்துள்ளனர்.








