Breaking News

மறு அறிவித்தல் கிடைக்கும் வரை கடலுக்குச் செல்லத் தடை !

மறு அறிவித்தல் வரை எவரும் கடலுக்குச் செல்லவேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை !

குறிப்பாக நாளை 5 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் எவரும் கடலுக்குச்செல்ல வேண்டா மென அனர்த்த முகாமைத்துவ மத்தி ய நிலையம் எச்சரிக்கை விடுத்து ள்ளது. 

இதேவேளை, வங்களா விரிகுடா, மற்றும் நாட்டை அண்மித்துள்ள கடல் பகுதி களில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும். 

பொத்துவிலிலிருந்து காங்கேசன்துறை வரை திருகோணமலை ஊடான கட ற்பரப்பில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம். இதே வேளை, வடக்கு - கிழக்கு கடற்பரப்பில் பொத்துவிலிலிருந்து புத்தளம் வரை திருகோணமலை ஊடாக, காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஆகிய கடற்ப ரப்பில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீச க்கூடும். 

இதேவேளை, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை கடற்பரப்பில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 கிலோ மீற்றர் வேகத்திற்கும் அதிக மாக காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் கடற்பரப்பில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதனால் மீனவர்கள் மற்றும் கடலில் பயணிப்போர் நாளை 5 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாமென அனர்த்த முகாமை த்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, மீனவர்கள் நாளை 5-ஆம் திகதி முதல் தெற்கு ஆந்திரா, வட தமிழகத்தின் ஆழ்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாமென சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.