அரசியல் கட்சிகளுக்கு மார்ச் 12 இயக்கத்திலிருந்து சிவப்பு வேண்டுகோள் !
கடந்த காலங்களைப் போன்று இத் தேர்தலிலும் மோசடியாளர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் மன்னர்களை தெரிவு செய்ய வேண்டாமென ஸ்ரீல ங்காவின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் வலியுறுத்தி யுள்ளன.
அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியலில் இப்படிப்பட்டவர்களை உள்ளடக்கியிருந்தால் உடனே அவர்க ளது பெயர்களை அகற்றும்படியும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்க ளின் இயக்கமான மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவில் உள்ளூராட்சி சபைகளு க்கான தேர்தலுக்கான கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனுத்தாக்கல் செயற்பாடு நாடளாவிய ரீதியில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஸ்ரீலங்கா விலுள்ள முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் இயக்கமான மார்ச் 12 இயக்கம் கொழும்பில் இன்றைய தினம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்ட பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோரண ஹெட்டியாராச்சி கருத்து வெளியிடுகையில்,
“தகுதியுடையோர் மற்றும் மோசடியாளர்களை அரசியல் கட்சிகள் தெரிவு செய்து வேட்பாளர்க ளாக முன்னிறுத்தினால் மார்ச் 12 இயக்கத்தின் ஊடாக அவர்களை நாங்கள் வெளிப்படுத்த தயாராகியுள்ளோம்.
இப்போதும் எமக்கு இது சம்பந்தமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள், ஊழல், மோசடியாளர்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதேபோல மணல் கொள்ளையாளர்கள், சட்ட விரோத மதுபான உற்பத்தியாளர்கள், தொழில் வாய்ப்பை வழங்குவதாக மக்கள் பணத்தை மோசடி செய்தவர்களின் போன்ற பொலிஸ் அறிக்கைகளும் எம்மைச் சந்தித்துள்ளன.
இப்படிப்பட்டவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தினால் அவர்களது இந்த இரகசியங்களையும் அம்பலப்படுத்துவோம்.
எதிர்வரும் தேர்தலில் இப்படியா னவர்கள் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்தால் அவர்களது பெயரை நீக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
இத் தெளிவுபடுத்தல்கள் மட்டக்களப்பு, கண்டி, களுத்துறையில் சிறப்பான முறையில் நடைபெறுகின்றன. பல மாட்டங்களில் மார்ச் 12 இயக்கம் தனது செயற்பாட்டை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்கிறது. எனவே நிறம், கட்சி என்று பாராமல் சிறந்தவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.