முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது விசாரணை - இராணுவம்
முல்லைத்தீவு தண்ணி முறிப்பு பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் மீது விசாரணைக்குள்ளான சம்பவத்துக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு இல்லை யென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஹான் செனவிரத்த மறுத்து ள்ளார்.
இராணுவச் சீருடையுடன் நின்று ஊடக வியலாளர்கள் சிலரை, விசார ணைக்கு உட்படுத்தியமை குறித்து முல்லைத்தீவு கட்டளைத் தளபதியி டம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர் மறுத்துள்ளார்.
ஆகவே இராணுவச் சீருடையில் நின்றவர்கள் இராணுவத்தினர் அல்ல. எனினும் இச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுமெனவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஹான் செனவிரத்த ஊடகங்களுக்குத் தெரிவி த்தார்.
முல்லைத்தீவு தண்ணிமுறிப்புப் பிரதேசத்தில் நடைபெறும் சிங்கள குடியே ற்றங்கள் தொடர்பாக கடந்த சனிக்கிழமை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடக வியலாளர்கள் எட்டுப் பேரை இராணுவத்தினரும் பொலிஸாரும் விசாரணை க்கு உட்படுத்தியுள்ளனர்.
அவர்கள் பயணித்த வாகனத்தையும் சோதனையிட்டதுடன் சுமார் அரை மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் வாகனம் ஒன்றில் சென்றபோது, சிவில் உடையில் நின்ற இராணுவத்தினர் முதலில் தங்களை விசாரணை செய்தாகவும் விசாரணை செய்த இராணுவத்தினர் பின்னர் பொலிஸாரை அழைத்ததாகவும் அவர்களும் சிவில் உடையில் வந்து தங்களை விசாரணை செய்ததாக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற ஊடகவியலாளர்கள் என்பதால் ஆவா குழு வுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தியதாக சிவில் உடையில் நின்ற பொலிஸார் ஒருவர் புன்னகைத்தவாறு கூறியதாக தெரிவித்த அதேவேளை இவ் விடயம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.