Breaking News

பிலிப்பைன்சில் நிலச்சரிவு 30 பேர் பலி !

பிலின்பைன்சின் பிலிரான் மாகாணத்தில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ள்ளது. இதில் 30 பேர் பலியாகியுள்ளதுடன் 23 பேர் காணாமல் போயுள்ளதாக முதற்கட்ட தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

மேலும் 23 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு மேலும் நீடிக்குமென அச்சம் எழுந்துள்ளது. பல இடங்களில், மின் கம்பங்கள் சாய்ந்ததால், தீவின் பெரு ம்பாலான பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன. மீட்பு படையினர், பொலீசார், காணாமல் போனவர்களை தேடும் பணி யில் ஈடுபட்டு உள்ளனர். புயல் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணி, போர்க்கால அடிப்படை யில் இடம்பெற்று வருகின்றது.

போக்குவரத்துக்கான பாலங்கள் பல உடைந்து விழுந்துள்ளதால் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாதிக்க ப்பட்ட பகுதிகளில் இருந்து 10,000-கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதி களுக்கு இடம் மாறிச் செல்வதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு படையினர் மற்றும் பொலிசார் உள்ளிட்டோர் காணாமல் போனவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.