தமிழருக்கு சார்பாக நீதிபதியாம் இராணுவ அமைப்பு குற்றச்சாட்டு!
தமிழ் இளைஞர்கள் உட்பட 11 தமிழர்கள் கொழும்பில் கடத்தப்பட்ட வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களமும், கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவானும் முன்னிலையில் செயற்படுவதாகவும் தாய் நாட்டிற்கான இராணுவம் என்ற அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அதேபோல இவ் வழக்கில் தொடர்பு டையவராக மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் அடைக்கலம் பெற்றுவரும் நேவி சம்பத் என்பரை கைது செய்வதற்கான உத்தரவை நீதி மன்றம் பிறப்பிக்க வேண்டுமெனவும் தாய் நாட்டிற்கான இராணுவ அமை ப்பின் இணைப்பாளர் சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன அறிக்கை விடுத்துள்ளார். 2012ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் தெஹிவளை பகுதியில் வைத்து 11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நாளைய தினமும் நடைபெறவுள்ளது.
இந் நிலையில் கொழும்பில் இன்றைய தினம் விசேட ஊடகவியலாளர் சந்தி ப்பை நடத்திய தாய்நாட்டிற்கான இராணுவம் என்ற அமைப்பு, இந்த வழக்கு விசாரணையின்போது சந்தேக நபர்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டி ருக்கும் கடற்படையின் புலனாய்வு உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்படு வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த ஊடக சந்திப்பில் குறித்த அமைப்பின் இணைப்பாளரான சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன கருத்து வெளியிடுகையில்,“11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு விசா ரணையின்போது சந்தேக நபர்களான கடற்படை புலனாய்வுத்துறை அதிகாரி களுக்கு பிணை வழங்க வேண்டாம் என்றும், பிணை கோரிக்கைக்கு எதிராக செயற்படுமாறும் இந்த வழக்கு நடவடிக்கைக்குப் பொறுப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் இரண்டாவது சிரேஷ்ட அதிகாரி டப்புல டி லிவேரா வலியு றுத்தியுள்ளார்.
இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்ட ஆவணங்களையும் இச் சந்தர்ப்பத்தில் நான் சமர்பிக்கின்றேன். இந்த வழக்குடன் தொடர்புடைய நேவி சம்பத் என்ற கொமாண்டன் நிலந்த சம்பத் முனசிங்கவுக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கின்ற போதிலும் அவரை கைது செய்ய அவசியமில்லையென பாதிக்கப்பட்ட தமி ழர்கள் சார்பிலான சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை நீதவான் லங்கா டி ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் போன்று இன்று நீதவானும் சட்டத்தை நன்றாகவே சட்டத்தை வளைக்கின்றார். நீதவானும் பக்கச்சார்பா கவே செயற்படுகிறார்.
அதேபோல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்தவர்களும் இந்த வழக்கில் பக்கச்சார்பாகவே செயற்படுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தும்படி பிரதம நீதியரசர் மற்றும் சுயாதீன நீதி ஆணைக்குழுவுக்கும் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.
இதன் காரணமாகவே கடற்படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டு இன்றும் 3 மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் சிறைகளில் உண்ணா விரதத்தில் ஈடுபட்டபோது அதுகுறித்து அவதானத்தை திருப்புகின்ற ஜனாதி பதி, பிரதமர், நீதியமைச்சருக்கு இவ் வழக்கு சார்ந்த விடயங்களிலும் கவனம் செலுத்துமாறு கோரிக்கை ஒன்றை விடுக்கின்றேன்.
எனவே நாளைய தினம் இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிலையில் கடற்படை புலனாய்வாளர்கள் மூவருக்குமான பிணை கோரி க்கையை எதிர்க்க வேண்டாமென அரச சட்டத்தரணியிடம் கோரிக்கை விடு க்கின்றேன்” என்றார்.