பங்கு வேண்டுமாம் புளொட்! பேரம் பேசும் சித்தார்த்தன்!
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 3 உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர் பதவியையும், ஏனைய மாவட்டங்களில் தலா ஓர் உள்ளூராட்சி மன்றத்தின் தவிசாளர் பதவியையும் கோரவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுள் ஒன்றான புளொட் அமைப்பு வெளிப்படு த்தியுள்ளது.
ஆசனப் பங்கீடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் நடைபெறவுள்ள நிலையிலேயே, அந்தக் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்ததாவது,
வடக்கு மாகாணத்தில் வன்னிப் பிராந்தியத்திலுள்ள மாவ ட்டங்களின் பங்கீடுகள் தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் தொடர்பில் மாத்திரமே இன்னும் பேச்சு முன்னெடுக்க வேண்டியுள்ளது.
மற்றொரு பங்காளிக் கட்சியான ரெலோ, தமிழ் அரசுக் கட்சியுடன் பேசி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அறியமுடிகின்றது.
நாம், யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று உள்ளூராட்சி மன்றங்களில் தவிசாளர் பதவியைக் கோரவுள்ளோம். மானிப்பாய், சங்கானை, வலி.தெற்கு ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர் பதவியையே பெரும்பாலும் கோருவோம்.
இருப்பினும் சிலவேளைகளில் இச் சபைகளில் மாற்றம் வரலாம். ஆனால் நாம் கோரும் எண்ணிக்கையில் மாற்றம் வராது எனத் தெரிவித்துள்ளார்.